ரிஷப் பண்ட் காதலி & சகோதரி திடீர் விசிட்.. டெல்லி போட்டியில் சுவாரஸ்யம்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ரிஷப் பண்ட் திடீரென ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, முதல் இன்னிங்ஸில் கொல்கத்தாவை 149 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.

பண்ட்-ன் நிலைமை
டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு நடப்பு சீசன் சற்று மோசமாகவே இருந்து வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அந்த அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா, காயம் என முன்னணி வீரர்கள் பலரும் இன்றி பண்ட் தவித்து வருகிறார். இதனால் இந்தாண்டு டெல்லி அணி தேறுமா என்ற நிலைக்கே சென்றுவிட்டது.

ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ்
இப்படிபட்ட இக்கட்டான சூழலில் தான் இன்று கொல்கத்தாவை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த போட்டியில் பெரும் சர்ஃப்ரைஸ் காத்திருந்தது. அதாவது ரிஷப் பண்ட்-ன் சகோதரி சாக்ஷி பண்ட் மற்றும் காதலி ஈஷா நேகி ஆகிய இருவருமே இப்போட்டியை பார்வையாளர்களுக்கு மத்தியில் அமர்ந்து கண்டு வந்தனர்.

ரிஷப் பண்ட் காதல் கதை
ரிஷப் பண்ட் மற்றும் இஷா நேகி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதனை 2019ல் பண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பண்ட்-க்கு கடினமான சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் இஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு நம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும் வகையில் பதிவுகளை போடுவார்.

நேரடி வருகை ஏன்?
ஆனால் தற்போது நேரடியாகவே வந்துள்ளார். மைதானத்தில் பண்ட்-க்காக இஷா நேகி கூச்சலிட்டு உற்சாகப்படுத்திக்கொண்டிருக்க, அந்த மகிழ்ச்சியில் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரேயாஸுக்கு எதிரான அட்டகாசமான கேட்ச், அபார கேப்டன்சி என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications