Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவை முந்திய ரியான் பராக்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு சாதனையா?? ரசிகர்கள் வியப்பு!

மும்பை: சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை அசால்டாக முறியடித்துள்ளார் ராஜஸ்தான் அணியின் ரியான் பராக்.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்களை குவித்தது.

முக்கிய விக்கெட்கள்

முக்கிய விக்கெட்கள்

இந்த போட்டியில் சென்னை அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தியதில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கிற்கு முக்கிய பங்கு உண்டு. நல்ல ஃபார்மில் இருந்த ஜகதீசனை 1 ரன்னுக்கும், மொயீன் அலியை 93 ரன்களுக்கும் ரிஸ்க்கான கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

 குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

ரியான் பராக் கேட்ச் பிடிக்கும் முறை சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஒரு கேட்ச்சை பிடித்த பின்பு பந்தை தரைப்பகுதி வரை கொண்டு சென்று, கீழே தொடவில்லை என அனைவருக்கும் காண்பிப்பார். அம்பயர்களின் மோசமான முடிவுகளை விமர்சிக்க இதுபோன்று செய்கிறார். ஆனால் இது ஒரு நல்ல வீரருக்கு அழகல்ல என முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

 பிரமாண்ட சாதனை

பிரமாண்ட சாதனை

இந்நிலையில் விமர்சனங்களை தாண்டி ரியான் பராக் அபார சாதனையை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பெருமையை ரியான் பராப் பெற்றார். இதற்கு முன்பு வரை சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா 13 கேட்ச்களை பிடித்திருந்தார். ஆனால் தற்போது ரியான் பராக் 15 கேட்ச்களை பிடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

வீரர்களின் பட்டியல்

வீரர்களின் பட்டியல்

ஐபிஎல்-ல் அதிக கேட்ச்களை பிடித்தவர்களின் பட்டியலை பார்க்கலாம்.

  • ரியான் பராக் - 15 கேட்ச்கள் ( 2022 )
  • ரவீந்திர ஜடேஜா - 13 கேட்ச்கள் ( 2021 )
  • ரவீந்திர ஜடேஜா - 13 கேட்ச்கள் ( 2015 )
  • ரோகித் சர்மா - 13 கேட்ச்கள் ( 2012 )
Story first published: Friday, May 20, 2022, 22:45 [IST]
Other articles published on May 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+