Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தப்பு பன்னிட்டீங்களே..அஸ்வின் மன்னிப்பு கேட்டார்” களத்தில் நடந்த சண்டை.. ரியான் பராக் கூறிய உண்மை

மும்பை: அஸ்வினுடனான சண்டையில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ரியான் பராக் கூறியுள்ளார்.

Recommended Video

Ashwin கூட என்ன சண்டை... உண்மையை சொன்ன Riyan Parag #Cricket

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.

நடப்பு சீசனில் பல்வேறு இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தால் கவனத்தை ஈர்த்த சூழலில் ரியான் பராக் மட்டும் சர்ச்சையில் சிக்கினார்.

ரியான் பராக்கின் சர்ச்சை

ரியான் பராக்கின் சர்ச்சை

களத்தில் மோசமான உடல்மொழிகள், சீனியர்களிடம் சண்டை என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. இதில் முக்கியமான ஒன்று அஸ்வினின் சண்டை. குவாலிஃபையர் 1 போட்டியில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் அஸ்வின் மற்றும் ரியான் பராக் களத்தில் இருந்தனர். அப்போது ரியான் பராக் மோசமாக ரன் அவுட்டானார்.

எப்படி ரன் அவு

எப்படி ரன் அவு

யாஷ் தயால் வைட் டெலிவரியாக வீச, அந்த பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதனையடுத்து நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த ரியான் பராக் சிங்கிள் எடுக்க ஓடிவர, அஸ்வின் மட்டும் ஓடாமல் இருந்துவிட்டார். இதனால் அவுட்டான ரியான் பராக், அஸ்வினை பார்த்து முறைத்துக்கொண்டே களத்தை விட்டு வெளியேறினார். இதற்கு விமர்சனங்கள் குவிந்த நிலையில் உண்மை தெரியவந்துள்ளது.

ரியானின் விளக்கம்

ரியானின் விளக்கம்

இதுகுறித்து பேசிய ரியான் பராக், அஸ்வின் ஒரு டெயில் எண்டருடன் பேட்டிங் செய்திருந்தால் ரன் ஓடாமல் இருந்தது சரிதான். ஆனால் எதிரில் பேட்ஸ்மேனான நான் இருக்கிறேன். அப்போது தைரியமாக ரன் எடுக்க ஓடாமல் இருந்தது தவறு தான். இதனால் தான் அதிர்ச்சியில் நான் அஸ்வினை பார்த்துக்கொண்டே சென்றேன்.

மன்னிப்பு கேட்டார்

மன்னிப்பு கேட்டார்

அந்த போட்டிக்கு பிறகு அஸ்வின் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். அவர் அந்த சமயத்தில் வேறு ஏதோ சிந்தனையில் ஓடாமல் இருந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். ஆனால் அதற்குள் நான் அஸ்வினுக்கு மரியாதை தராமல் நடந்துவிட்டேன் என சமூகவலைதளங்களில் பரப்பிவிட்டனர். உண்மையில் இதுதான் நடந்தது என ரியான் பராக் கூறியுள்ளார்.

Story first published: Monday, June 6, 2022, 16:38 [IST]
Other articles published on Jun 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+