ஐபிஎல் குறித்து தப்பா பேசுவீயா..! பாகிஸ்தானின் சர்ச்சை பதிவு.. 4 வார்த்தைகளில் உத்தப்பா தந்த பதிலடி
மும்பை: ஐபிஎல் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு ராபின் உத்தப்பா நான்கே வார்த்தைகளில் பதிலடி கொடுத்துள்ளார்.
15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதியன்று தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
மும்பையில் தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் தொடர்
இதற்கான பரபரப்பு நடந்து வரும் சூழலில் தான் பிரச்சினை எழுந்துள்ளது. இந்தாண்டில் நடைபெறும் 2வது உள்நாட்டு தொடர் ஐபிஎல் ஆகும். இதற்கு முன்னதாக ஜனவரி 27 முதல் பிப்ரவரி 27 வரை பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்றது. இந்த இரண்டையும் ஒப்பீடு செய்து பாகிஸ்தானை சேர்ந்த அர்ஃபா ஃபெரோஸ் சேக் என்ற பத்திர்கையாளர் ட்வீட் போட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய ட்வீட்
அதில், ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிடவே கூடாது. பிஎஸ்எல் தொடர் 2016ம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. இதே வேளையில் பல நாடுகளும் உள்நாட்டு தொடர்களை தொடங்கிய போதும், பாகிஸ்தான் சூப்பர் லிக் நல்ல முன்னேற்றம் கண்டது. ஆனால் ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு அறிமுகமான போது எந்தவொரு அதற்கு எந்த நாடுகளும் போட்டியாக இல்லை.

உத்தப்பா பதிலடி
இந்நிலையில் இதற்கு சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா நான்கே வார்த்தைகளில் செம பதிலடி கொடுத்துள்ளார். அவர் போட்டுள்ள ட்வீட்டில் ( IPL Created the Market ) ஐபிஎல் தான் இதுபோன்ற ஒரு மார்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதன் விளைவு தான் இன்று இத்தனை உள்நாட்டு தொடர்கள் நடைபெறுகிறது எனக்கூறியுள்ளார்.

ரமீஷ் ராஜாவின் சீண்டல்
ஏற்கனவே ஐபிஎல் தொடர் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜாவும் சீண்டியிருந்தார். ஐபிஎல் தொடரில் வருவது போன்று பிஎஸ்எல் தொடரிலும் மெகா ஏலம் அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், இனி ஐபிஎல்-க்கு எந்தவொரு அயல்நாட்டு வீரரும் செல்ல மாட்டார் எனக்கூறியது வேடிக்கையை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications