Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொன்ன ஒரு விஷயம்... ரெய்னா மீதான விஸ்வாசம்.. சிஎஸ்கே ரசிகர்கள் திட்டினர்.. உத்தப்பா ஓபன் டாக்

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தம்மை தேர்வு செய்ததற்கு ரெய்னா ரசிகர்கள் திட்டியதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராபின் உத்தப்பா.

இந்த நிலையில், தமிழக வீரர் அஸ்வினுடன் பேசிய ராபின் உத்தப்பா, சிஎஸ்கேவில் தனது அனுபவங்கள் குறித்து பேசினார்.

தோனி பேசினார்

தோனி பேசினார்

அதில், 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியிலிருந்து நான் சிஎஸ்கேவிற்கு வந்தேன். அன்று மாலையே தோனி என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, எடுத்த உடனே பிளேயிங் லெவனில் உங்களுக்கு இடம் கிடைக்காது. உங்களுக்கான வாய்ப்பு வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார். 5 நாட்களுக்கு ஒரு முறை பயிற்சியாளர் என்னிடம் வந்து பேசுவார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அணியில் இடம் இல்லை என்பது குறித்து நான் வருத்தப்பட கூடாது என்பதற்காக சிஎஸ்கே எடுத்த நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிஎஸ்கேவில் இருக்கும் போது நான் ஒரு பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். சிஎஸ்கே அணி தொடங்கப்பட்டதில் இருந்தே பிசியோ, நிர்வாகிகள் என யாருமே மாறவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

சிஎஸ்கேவை பொறுத்தவரை ஒரு வீரருக்கு குறைந்து ஐந்து, ஆறு போட்டியிலாவது வாய்ப்பு தருவார்கள். நீங்கள் சிறந்த வீரர் என்று நினைத்தால் இன்னும் வாய்ப்பு கிடைக்கும். வாட்சனுக்கு அது போல் தான் பைனல்ஸ் வரை வாய்ப்பு கிடைத்தது. அதன் பலனாக அவர் போட்டியை வென்று கொடுத்தார்.

ரசிகர்கள் திட்டினர்

ரசிகர்கள் திட்டினர்

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி என்னை தேர்வு செய்த போது 80 சதவீதம் பேர் வரவேற்றாலும், 20 சதவீதம் பேர் என்னை திட்டினர். அவர்கள் அனைவரும் ரெய்னாவை எடுக்காமல் என்னை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். ஆனால் அவர்கள் மீது எனக்கு கோபம் வரவில்லை. ரெய்னா சிஎஸ்கே அணியின் உண்மையான சேவகன். அவர் மீது இருந்த விஸ்வாசம், பாசம் காரணமாக சில ரசிகர்கள் என்னை திட்டினார்கள்.

Story first published: Thursday, April 7, 2022, 18:21 [IST]
Other articles published on Apr 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+