Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

200வது சிக்சர் விளாசிய ரோகித்.. தொடர்ந்து சொதப்பும் பொலார்ட்.. காப்பாற்றிய டிம் டேவிட்

மும்பை: ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா, மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதனையடுத்து தொடக்க வீரராக ரோகித் சர்மாவும் இஷான் கிஷனும் களமிறங்கினர்.

ஹிட்மேன் ரிட்டன்

ஹிட்மேன் ரிட்டன்

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி குஜராத் பந்துவீச்சை சிதற அடித்தது. ரோகித் சர்மா 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். இதில் 42 ரன்கள் பவர்பிளேவில் மட்டும் ரோகித் அடித்தார். 43 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 40 களில் அவுட்டான வீரர் என்ற பெயரை பெற்றார்.

200வது சிக்சர்

200வது சிக்சர்

இந்த இன்னிங்சில் ரோகித் சர்மா மும்பை அணிக்காக 200வது சிக்சர் விளாசி இருக்கிறார். இஷான் கிஷனும் தன் பங்கிற்கு 29 ரன்களில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 13 ரன்களிலும் திலக் வர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 10 ஓவர் முடிவில் 97 ரன்கள் எடுத்திருந்தது.

பொலார்ட் பரிதாபம்

பொலார்ட் பரிதாபம்

இதனையடுத்து பேட்டிங் செய்த வந்த பொலார்ட், டெஸ்ட் மேட்சை விளையாடியது போல் ரன் குவிக்க திணறினார். 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் மீண்டும் சரிவை நோக்கி சென்றது. இதன் மூலம் பொலார்டின் ஐபிஎல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

பட்டையை கிளப்பிய டேவிட்

பட்டையை கிளப்பிய டேவிட்

பின்னர் களத்துக்கு வந்த டிம் டேவிட், தன்னுடைய திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 4 சிக்சர், 2 பவுண்டரி என 21 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் என்ற நிலையில் எட்டியது. தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்களை எடுத்துள்ளது.

Story first published: Friday, May 6, 2022, 22:19 [IST]
Other articles published on May 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+