ஐபிஎல்- தாய்க்கு செய்த சத்தியம் - காப்பாற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
மும்பை: கேஜிஎப் படத்தில் வருவது போல், வெஸ்ட் இண்டீஸ் வீரர் போவெல் தாய்க்கு செய்த சத்தியத்தை காப்பாற்றி வருகிறார்.
எப்படி நம்ம ராக்கி பாய், உலகத்தில் உள்ள அத்தனை தங்கமும் உங்களுக்கு தருகிறேன் அம்மா என்று சொன்னாரோ,
அதே போன்ற ஒரு சத்தியத்தை பொவேல் சிறு வயதில் நிறைவேற்றி அதனை காப்பாற்றி வருவதாக கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப் கூறியுள்ளார்.

நிரந்தர இடமில்லை
28 வயதான போவெல் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார். ஆனால் போவெல் அதிரடியாக விளையாட கூடிய வீரராக இருந்தாலும், தொடர்ந்து ரன் குவிக்க முடியாத காரணத்தால் உள்ளே, வெளியே என்று அணியில் சென்று கொண்டிருந்தார்.

திருப்புமுனை
2017ஆம் ஆண்டே கேகேஆர் அணியால் வாங்கப்பட்டாலும் போவெல்க்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் போவெலின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த 2 ஆண்டுகளாக தான் உச்சம் தொட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் போவெல் சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஐபிஎல் மெகா ஏலம்
இதே போன்று பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியிலும் போவெல் அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் மெகா ஏலத்தில் போவெல் 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.தற்போது டெல்லி அணிக்காக ஃபினிஷிங் ரோலில் கலக்கி வருகிறார் போவெல்.

தாய்க்கு சத்தியம்
போவெல் குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப், போவெல் இளம் வயது வாழ்க்கை வறுமையால் பாதிக்கப்பட்டது. அப்போது அவர் பள்ளி பருவத்தில் இருந்த போது தனது தாய்க்கு ஒரு சத்தியம் செய்தார். தமது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்பேன் என்று கூறி இருந்தார். அதற்கு அவர் தேர்ந்து எடுத்த பாதை கிரிக்கெட். தற்போது ஐபிஎல் தொடர் மூலம் தனது சத்தியத்தை போவெல் நிறைவேற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications