Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா நீ.? அதிரடி அசுரனை அலறவிட்ட அறிமுக வீரர்.. கடைசி ஓவரில் ராஜஸ்தான் திக்..திக்.. வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டததில் லக்னோ அணியின் ஹாட்ரிக் வெற்றியை ராஜஸ்தான் அணி தடுத்து நிறுத்தியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீசியது.ராஜஸ்தான் அணி ஜெய்ஷவாலுக்கு பதிலாக வெண்டர் டுசனை அணியில் சேர்த்தது.

இதனால் பட்லருக்கு ஜோடியாக தேவுடட் படிக்கல் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் ராஜஸ்தான் அணி எடுத்த முடிவு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.

ராஜஸ்தான் பிளான்

ராஜஸ்தான் பிளான்

அதிரடியாக விளையாட முற்பட்ட பட்லர் 1 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேவுடட் படிக்கல் பொறுப்பாக விளையாடினாலும் அவரால் வேகமாக ரன் குவிக்க முடியாமல் கொஞ்சம் திணறினார். 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.கேப்டன் சஞ்சு சாம்சன் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

வெண்டர் டுசைன் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டை ராஜஸ்தான் இழக்க 67 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஹேட்மயர் 36 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும். திடீரென்று அஸ்வின் 28 ரன்கள் ஆகும் போது ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். இதனால் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

கோல்டன் டக்

கோல்டன் டக்

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே இடியாக இறங்கியது பௌல்டின் பந்துவீச்சு. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ராகுல் கோல்டன் டக் ஆக, அடுத்து வந்து இறங்கிய கிருஷ்ணப்பா கௌதமும் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் ஹோல்டர் 8 ரன்களும், தீபக் ஹுடா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க லக்னோ அணி திணறியது.

19 ரன்கள்

19 ரன்கள்

இருப்பினும் டி காக் பொறுப்புடன் விளையாடி 39 ரன்கள் எடுத்து ராஜஸ்தானுக்கு நெருக்கடி தர, அவருடைய விக்கெட்டையும், இளம் வீரர் பதோனி விக்கெட்டையும் சாஹல் வீழ்த்தினார். இதனால் ஆட்டமே தலைக்கீழ் மாறியது. எனினும் இறுதியில் மார்க்கஸ் ஸ்டோனிஸ் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார், பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் 19 ரன்கள் சென்றது.இதனால் கடைசி ஓவரில் வெற்றி 15 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஸ்டோனிஸ், ஆவேஷ் கான் நின்றனர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரை அறிமுக போட்டியில் விளையாடிய குல்திப் சென்னுக்கு சஞ்சு வழங்கினார். முதல் பந்தில் ஆவேஷ் கான், சிங்கிள் ஓடி ஸ்டோனிஸ் அடுத்த பந்தை எதிர்கொண்டார். இதனால் போட்டி லக்னோவுக்கு சாதகமாக முடிந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 2வது பந்து புல் லெங்தில் ஓயிடாக வீச, அதனை ஸ்டோனிஸ் அடித்து அந்த பந்து நேரடியாக ஃபில்டரிடம் பிடிப்பட்டது. இதனால் கணக்கு 4 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

அடுத்த பந்தையும் அவர் சிறப்பாக வீச, ஸ்டோனிஸ் அதனை வித்தியாசமாக அடிக்கலாம் என முற்பட்டு கோட்டை விட்டார். இதனால் 3 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட, அந்த பந்தையும் லாவகமாக அடிக்க முடியாத படி வீசினார் குல்தீப் சென். இதனால் 2 பந்தில் 14 ரன்கள் என்ற நிலை வர கடைசி 2 பந்திலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் சென்றது. இதனால் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதுவே சிஎஸ்கே வீரர்களாக இருந்திருந்தால் முதல் 3 பந்தில் 3 சிக்சர்களை விட்டு கொடுத்து இருப்பார்கள்.

யார் குல்தீப் சென்

யார் குல்தீப் சென்

கடைசி ஓவரை ஸ்டோனிஸ் போன்ற வீரருக்கு நெருக்கடி இல்லாமல் வீசிய குல்தீப் சென்ஐ பலரும் பாராட்டி வருகின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான குல்தீப், 16 முதல்தர போட்டியில் விளையாடி 44 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தற்போது அறிமுக போட்டியிலேயே குல்தீப் அசத்தியுள்ளார். கடந்த முறை இதே போல் கார்த்திக் தியாகியும் கடைசி ஓவரில் சிறப்பாக வீசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 11, 2022, 10:53 [IST]
Other articles published on Apr 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+