சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி தந்த பவுல்ட்..பதிலுக்கு சிறுவன் செய்த காரியம்.. வீடியோ இதோ
அகமதாபாத்: ஐபிஎல் குவாலிபையர் 2 போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் காத்திருந்த சிறுவன் ஒருவருக்கு பட்லர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு சென்றதுக்கும், மும்பை அணி 10வது இடத்தில் நிறைவு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
அது தான் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பவுல்ட். மும்பை அணிக்கு பும்ராவுக்கு பக்க பலமாக இருந்தவர் பவுல்ட்.

பவுல்ட் 15 விக்கெட்
ஆனால் மெகா ஏலத்தில் டிரெண்ட் பவுல்டை எடுக்காமல் மும்பை அணி கழற்றிவிட்டது. இதனை பயன்படுத்தி கொண்ட ராஜஸ்தான், பவுல்டை ஏலத்தில் எடுத்தது. நடப்பு சீசனில் 15 போட்டியில் விளையாடிய பவுல்ட், 15 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு ஓவருக்கு 8 ரன்களை கொடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்திலும் பவுல்டின் அபார பந்துவீச்சால் தான் ராஜஸ்தான் வென்றது.

திருப்புமுனை
ராஜஸ்தான் அணியின் பலமாக விளங்கிய அஸ்வின், சாஹல் ஆகியோரை மேக்ஸ்வெல் ஒரு காட்டு காட்டினார். இதனையடுத்து, டிரெண்ட் பவுல்ட் பந்துவீச வந்தார். ஸ்லோ பால், அதிவேக பந்து என மாற்றி, மாற்றி பவுல்ட் வீசியதால், மேக்ஸ்வெல் கொஞ்சம் தடுமாறினார். இதனால் ஏற்பட்ட கவனச் சிதறலால் ஃபைன் லெக் திசையில் மேக்ஸ்வெல் தூக்கி அடிக்க, மெக்காயின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

காத்திருந்த சிறுவன்
இதனால் ஆட்டம், ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக திரும்பியது. நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்த பவுல்ட், அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தார். இந்த நிலையில், ஆட்டம் முடிந்ததும், வெகு நேரமாக ஒரு சிறுவன் மட்டும் ராஜஸ்தான் வீரர்களை பார்ப்பதற்காக நின்று கொண்டு இருந்தார்.
இன்ப அதிர்ச்சி
இதனை கவனித்த டிரெண்ட் பவுல்ட், அந்த சிறுவனை அழைத்து தாம் அணிந்திருந்த ராஜஸ்தான் அணியின் டீ சர்டை கழற்றி கொடுத்தார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத அந்த சிறுவன், உணர்ச்சி மிகுதியில் அவனுடைய டி சர்ட்டை கழற்றினார். இதனை பார்த்ததும் சிரித்த பவுல்ட், பரவாயில்லை, உன் டீசர்ட் எனக்கு வேண்டாம். இதை நீயே வச்சிக்கோ என்று சொல்லிவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications