இவ்வளவு மோசமான விக்கெட்டா?? குஜராத் அணி சரிந்ததற்கான காரணம்.. கடும் கோபத்தில் ஹர்திக் பாண்ட்யா!
மும்பை: குஜராத் அணி சரிந்ததற்கு ஒரு முக்கிய வீரர் தான் காரணம் என்பதால் ஹர்திக் பாண்ட்யா ஆத்திரத்தில் உள்ளர்.
ஐபிஎல் 51வது லீக் போட்டியில் குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 177/6 ரன்களை குவித்தது.

தொடக்கம் சிறப்பு
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்கமெல்லாம் சிறப்பாக தான் இருந்தது. விருதிமான் சாஹா 55 ரன்கள், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்தனர். ஆனால் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்கள், சாய் சுதர்சன் 14 ரன்கள், ராகுல் தேவட்டியா 19 ரன்கள் என வெளியேறினர். இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தான் தேவை என்ற சூழலிலும் கூட வெற்றி பெற முடியவில்லை.

தோல்விக்கான காரணம்
குஜராத் அணியின் இந்த தோல்விக்கு சாய் சுதர்சனின் அலட்சியம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அவர் 11 பந்துகளில் 14 ரன்களை எடுத்து சிறப்பாக ஆடி வந்தார். நல்ல ஃபார்மிலும் இருந்ததால் அதீத நம்பிக்கை இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மோசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மோசமான விக்கெட்
16வது ஓவரை பொல்லார்ட் வீச, 2வது பந்து ஸ்லோ பாலாக போடப்பட்டது. அதனை சாய் சுதர்சன் சிக்ஸர் அடித்தார். இதனையடுத்து அவரின் ஆர்வத்தை பார்த்த பொல்லார்ட் மீண்டும் கடைசி பந்தை ஷார்ட் பாலாகவும், ஸ்லோவராகவும் வீசினார். இந்த முறை அதிர்ஷ்டவசமாக பந்தை அடிக்க தவறிவிட்டார். ஆனால் பேட்டை சுழற்றிய வேகத்தில் ஸ்டம்பில் பட்டு ஹிட் விக்கெட்டாகி வெளியேறினார்.
— Jemi_forlife (jemi_forlife) May 6, 2022
ஹர்திக் கோபம்
சாய் சுதர்சன் இருந்த ஃபார்மிற்கு நிதானமாக விளையாடி இருந்தால் கூட சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் எந்தவித நியாயமும் இன்றி மோசமாக அவுட்டானது மற்ற வீரர்களுக்கும் பதற்றத்தை உருவாக்கியது. இதனால் அவர் மீது ஹர்திக் பாண்ட்யா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications