தோனியுடன் வாழ்வது எவ்வளவு கஷ்டம்..?? மனம் திறந்த சாக்ஷி தோனி.. பிரைவசியே இல்லையென ஆதங்கம்!!
ராஞ்சி: தோனியுடன் வாழ்வது எவ்வளவு சிரமமான ஒன்று என்பது குறித்து அவரது மனைவி சாக்ஷி தோனி மனம் திறந்துள்ளார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி மற்றும் சாக்ஷி ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதியன்று கரம் கோர்த்தனர்.
12 ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பமான கிரிக்கெட் ஜோடியாக வலம் வரும் இவர்களின் திருமண வாழ்க்கை குறித்து அவ்வபோது சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.

மனம் திறந்த சாக்ஷி தோனி
அந்த வகையில் தற்போதும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிஎஸ்கே வீரர்களின், இல்லத்தரசிகளிடம் நேர்க்காணல் நடத்தப்பட்டது. அப்போது பேசிய சாக்ஷி, தோனி போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் வாழ வேண்டும் என்றால் பலவற்றை பொறுத்துக்கொண்டும், மாற்றிக்கொண்டும் வாழ வேண்டும் எனக் கூறினார்.

ப்ரைவசி இல்லை
அலுவலகத்திற்கு செல்பவரை திருமணம் செய்தாலே பல விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவே விளையாட்டு வீரர்களை திருமணம் செய்துக்கொண்டால் நிறைய விஷயங்களை பழகிக்கொள்ள வேண்டும். சுத்தமாக எங்களுக்கென்று ப்ரைவசி என்ற ஒன்று இருக்காது. கேமரா முன்னர் எப்படி இருக்கிறோமோ அதனை போன்றே நிஜ வாழ்வில் இருக்க மாட்டோம்.

தவறான கருத்துக்கள் வரும்
முக்கியமாக பொதுவெளியில் எங்களை குறித்து பல கருத்துக்கள் பரவும். நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக வெளியே சென்றால் கூட தவறாக எண்ணி கருத்துக்களை கூறுவார்கள். இதற்கெல்லாம் எங்களை தயார் படுத்திக்கொண்ட பின்பு தான் நாங்கள் இப்போது சகஜமாக இருக்கிறோம். ஒருபுறம் இப்படி இருந்தாலும், மற்றொரு புறம் எங்களது கணவர்களால் நாங்கள் பெருமைக் கொள்கிறோம் என சாக்ஷி தோனி தெரிவித்தார்.

தோனி ஆர்வம்
தோனியும் தற்போது சிஎஸ்கேவுடன் தான் உள்ளார். ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குவதையொட்டி, அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 40 வயதை கடந்த தோனி இந்தாண்டு ஐபிஎல்-ல் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோப்பையை வென்றுக்கொடுக்க தீவிரமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications