Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது போட்டிக்காக ஷிம்ரனுடன் சஞ்சு வைத்த பார்டி.. மிரண்டு போன ஐதராபாத்.. சாதனை படைத்த ராஜஸ்தான்

புனே: ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளுக்கு இடையிலாக நடைபெற்ற ஆட்டம் ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீஸ் சாப்பிட்டது போல் இருந்தது.

2 அணியிலும் பல புது வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் 7 பேர் அறிமுக வீரராக களமிறங்கினர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக ஜெய்ஷ்வால், பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

நோ பால்

நோ பால்

புது பந்தில் புவனேஸ்வர் குமார் நன்றாக ஸ்விங் செய்ய பட்லர் அதனை எதிர்கொள்ள தடுமாறினார். முதல் ஓவரின் 5வது பந்தில் ஜாஸ் பட்லர் விக்கெட்டை புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் , பட்லருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதே போன்று ஐதராபாத் அணி வீரர்கள் தொடர்ந்து நோ பாலாக வீசினர்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

குறிப்பாக 4 ஓவரில் 4 நோ பால்கள் ஐதாராபாத் அணி வீசியது. எனினும் சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 3 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 28 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். ஜெய்ஷ்வாலும் இளங்கன்று பயன் அறியாது என்ற வகையில் பெரிய ஷாட்களை ஆடி 20 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

5 சிக்சர்

5 சிக்சர்

இதன் பின்னர் 100வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரசிகர்களுக்கு பார்டி வைத்தார். முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். 25 பந்தில் அரைசதம் விளாச சஞ்சு சாம்சன், 5 இமாலய சிக்சர்களை விரட்டினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

சஞ்சுக்கு போட்டியாக படிக்கல்லும் அதிரடியாக விளையாடினார். இறுதியில் சிம்ரன் ஹேட்மர் 13 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.இதனால் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 210 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்தது. இது புனே மைதானத்தில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

Story first published: Tuesday, March 29, 2022, 22:01 [IST]
Other articles published on Mar 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+