Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஓப்பனர்களுடன் ப்ளேயிங் 11.. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் விநோத ஐடியா.. முழு விவரம்

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் ராஜஸ்தான் அணி 4வது ஓப்பனிங் வீரரை கொண்டு வந்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இதில் வெற்றி பெற வேண்டிய கட்டயாத்தில் இரு அணிகளுமே உள்ளன. ராஜஸ்தான் அணி இதுவரை 10 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமே எடுத்துள்ளது. எனவே இன்று வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் வாய்ப்பை சற்று உறுதி செய்ய முடியும். கடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் இன்று புதிய நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும்.

4வது ஓப்பனர்

4வது ஓப்பனர்

இதற்காக அணியில் ஓப்பனிங் வீரரான யஷஸ்வி ஜெய்ஷ்வாலை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். கடந்த சீசனில் கலக்கியிருந்த அவருக்கு இந்தாண்டு 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. கருண் நாயருக்கு வாய்ப்பு தந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து சொதப்பி வருவதால், இன்று மீண்டும் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வாலை கொண்டு வந்துள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏற்கனவே ஜாஸ் பட்லர், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன் இருக்கையில் மற்றொரு ஓப்பனர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி மாற்றம்

பஞ்சாப் அணி மாற்றம்

இது ஒருபுறம் இருக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளை தான் பெற்றுள்ளது. இனி ஒரு போட்டியில் தோற்றால் கூட ப்ளே ஆஃப் செல்வது கடினமாகிவிடும். ஏனென்றால் பஞ்சாப் அணியின் இடத்தை பிடிப்பதற்காக ஆர்சிபி, கொல்கத்தா, டெல்லி போன்ற அணிகள் தீவிர முனைப்புடன் உள்ளது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால், அதே ப்ளேயிங் 11 உடன் களமிறங்கியுள்ளது.

 ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், மயங்க் அகர்வால், பனுக்கா ராஜபக்ச, லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரிஷி தவான், ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா

ராஜஸ்தான் : ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், ரியான் பராக், ஹெட்மெயர், ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, குல்தீப் சென், யுவேந்திர சாஹல்

Story first published: Saturday, May 7, 2022, 18:08 [IST]
Other articles published on May 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+