Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய விக்கெட் கீப்பர் ரெடி.. ரிஷப் பண்ட்-க்கு அடுத்த தலைவலி..ஒரே நேரத்தில் பாவம் எவ்வளவு பிரச்சினை!

மும்பை: ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே ரிஷப் பண்ட்-ன் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு குழப்பம் உண்டாகியுள்ளது.

Recommended Video

SRH vs RR : Samson, Padikkal power Rajasthan Royals to 210/6 against SRH | Oneindia Tamil

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த 26ம் தேதி தொடங்கியது. அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியில் விளையாடிவிட்டன.

இதில் அணிகளின் தோல்விகளை விட, ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்டுள்ள நிலைமை தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

ரிஷப் பண்ட் தலைமை தாங்கும் டெல்லி அணி மொத்தமாக 7 அயல்நாட்டு வீரர்களை தான் வாங்கியது. இதில் ஆன்ரிக் நார்ட்ஜே, மிட்சல் மார்ஷ் ஆகிய இரு முக்கிய வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. வார்னர் ஏப்ரல் 10ம் தேதிக்கு மேல் தான் ஐபிஎல்-ல் விளையாடுவார் எனத்தெரிகிறது.

ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி

ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி

முஸ்திவிசூர் ரஹ்மான், லுங்கி இங்கிடி ஆகியோர் குவாரண்டைனில் உள்ளனர். இப்படி 7 வீரர்களில் 5 பேர் அணிக்கே இன்னும் வரவில்லை. இதனால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 அயல்நாட்டு வீரர்களை மட்டும் வைத்து சமாளித்தார். இதனால் இளம் கேப்டனான பண்ட் மீது தான் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

புதிய தலைவலி

புதிய தலைவலி

இந்நிலையில் புது பிரச்சினை கிளம்பியுள்ளது. ஐபிஎல்-ல் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி என 55 ரன்களை விளாசினார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 203 ஆக இருந்தது. இதே போல விக்கெட் கீப்பிங்கிலும் வில்லியம்சனுக்கு எதிரான டைவ், ராகுல் திரிபாதியின் கேட்ச் என சிறப்பாக செயல்பட்டார்.

பண்ட் மீது குற்றச்சாட்டு

பண்ட் மீது குற்றச்சாட்டு

இந்திய அணியில் ரிஷப் பண்ட் மீது நிதானம் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்கட்டான சூழல்களில் கூட பண்ட் பொறுமையாக செயல்படாமல், பேட்டை சுழற்றுகிறார். இது ஏதேனும் ஒரு முறை சாதகமாக முடிந்த போதும், பல முறை இந்திய அணிக்கு பின்னடைவாக செல்கிறது. முக்கியமான கட்டத்தில் பண்ட்-ஐ வைத்து ரிஸ்க் எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் கவனம் ஈர்த்துள்ளார். இவர் எந்த பேட்டிங் வரிசையிலும் களமிறங்கக்கூடியவர். இதனால் ரிஷப் பண்ட்-க்கு கூடுதல் நெருக்கடி வந்து சேர்ந்துள்ளது.

Story first published: Wednesday, March 30, 2022, 11:01 [IST]
Other articles published on Mar 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+