Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. பொதுவெளியில் அவமானப்படுத்திய சஞ்சு சாம்சன்.. ட்விட்டரில் நடந்த போர்!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கும், அதன் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் ட்விட்டரில் ஏற்பட்ட கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Recommended Video

IPL 2022: Captain Sanju Samson has an amazing attitude -R Ashwin | Oneindia Tamil

ஐபிஎல் 15வது சீசன் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

மெகா ஏலம், 10 அணிகள், மும்பை - புனே நகரங்களில் மட்டுமே போட்டிகள் என முற்றிலும் மாறுபட்ட ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் காத்திருந்தனர்.

ராஜஸ்தானின் குசும்பு

ராஜஸ்தானின் குசும்பு

இந்நிலையில் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கான சம்பவம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடந்துள்ளது. ராஜஸ்தான் அணி சமூக வலைதளப்பக்கங்களில் வேடிக்கையான பதிவுகளை செய்வது வழக்கம். சமீபத்தில் யுவேந்திர சாஹலை கிண்டல் செய்வதற்காக அவரை கேப்டன் என பதிவிட்டு ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது.

 வரம்பு மீறிய ராஜஸ்தான்

வரம்பு மீறிய ராஜஸ்தான்

ஆனால் அது நேற்று வரம்பு மீறி சென்றுள்ளது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் புகைப்படத்தை தலைப்பா, கண்ணாடி, புகையிலை ஆகியவையை அணிந்திருப்பது போன்று சிறுபிள்ளைதனமாக எடிட் செய்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் சாம்சன் என்ன ராஜஸ்தானியாக மாறிவிட்டாரா என கிண்டல் செய்தனர்.

சஞ்சுவின் கோபமான பதிவு

சஞ்சுவின் கோபமான பதிவு

கோபத்தின் உச்சிக்கு சென்ற சஞ்சு சாம்சன், எனது நண்பர்கள் இதுபோன்ற காரியங்களை செய்துக்கொண்டால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு அணி நிர்வாகம் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். இப்படி சிறுபிள்ளைதனமாக இருக்கக் கூடாது என பகிரங்கமாக பதிலடி கொடுத்தார். மேலும் ராஜஸ்தான் அணியின் சமூக வலைதளபக்கங்களை பின் தொடர்வதையும் நிறுத்தினார்.

 ரசிகர்களின் கவலை

ரசிகர்களின் கவலை

கடந்தாண்டு வார்னர் - ஐதராபாத் அணியிடையே கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் இந்தாண்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே ராஜஸ்தான் அணிக்கும், கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் மனக்கசப்பு உண்டாகியுள்ளது. இது வரும் நாட்களில் சரிசெய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, March 26, 2022, 9:46 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+