Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2022 – கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் விருந்து.. !! அட்டவணையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

மும்பை: ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு சீசனுக்கான அட்டவணையை பிசிசிஐ வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளது.

மொத்தம் 10 அணிகள், 70 போட்டிகள் என பிரம்மாண்டாக ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

இதில், இம்முறை 5 அணிகள் 2 பிரிவுகள் Virtual ஆக பிரிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் எப்படி நடக்கிறதோ அதே போல் இம்முறையும் போட்டிகள் நடைபெறுகின்றன.

குரூப் விவரம்

குரூப் விவரம்

அதன் படி குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும், ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.மேலும், அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளிடம் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும் .

முதல் போட்டி

முதல் போட்டி

அதன் படி சென்னை அணி, ஐதராபாத், பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணியுடன் தலா 2 முறை மோதும். கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளுடன் தலா ஒரு முறையும் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அட்டவணையில் பெரும்பாலும் முதல் போட்டியில் கடந்த முறை பைனலில் மோதும் அணிகள் முதல் போட்டியில் மோதும் வகையில் அமைக்கப்படும்.

டபுள் ஹெட்டர்ஸ்

டபுள் ஹெட்டர்ஸ்

ஆனால், இம்முறை முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதே போன்று இந்த அட்டவணையில் மொத்தம் 12 Double Headers போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 12 முறை ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெறும். இதனால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

வாரயிறுதி

வாரயிறுதி

போட்டியை மூன்றரை மணி நேரத்தில் முடிக்கவும் இம்முறை திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியை கடந்த முறை போல் 7.30 மணிக்கு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் மோதும் பெரும்பாலான போட்டிகள் வார இறுதி நாட்களில் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 2, 2022, 17:14 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+