For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய வடிவில் ஐபிஎல் 2022- எந்த அணிகள் 2 முறை மோதுகின்றன..? பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன. போட்டியின் அட்டவணைக்காக விர்ட்சுவலாக 10 அணிகள் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

சிஎஸ்கே Vs மும்பை

சிஎஸ்கே Vs மும்பை

குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் ரவுண்ட் ராபின் முறைப்படி மற்ற அணிகளோடு தலா 2 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 4 அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோதும்.

பெங்களூரு Vs ராஜஸ்தான்

பெங்களூரு Vs ராஜஸ்தான்

அதன் படி இருவேறு குரூப்பில் இடம்பெற்றுள்ள சென்னை, மும்பை அணிகள் தலா 2 முறை மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வெவ்வேறு பிரிவில் உள்ள கொல்கத்தா அணி, ஐதராபாத் அணிகள் 2 முறையும், பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் 2 முறையும் மோதும். டெல்லி, பஞ்சாப் அணிகள் வெவ்வேறு குரூப்பில் இருந்தாலும் 2 முறை மோதும்.

குஜராத் Vs லக்னோ

குஜராத் Vs லக்னோ

புதிய அணிகளான லக்னோ, குஜராத் வெவ்வேறு பிரிவில் இருந்தாலும் 2 முறை மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டியை போல் குலுக்கல் முறையில் பிரிக்கப்படாமல், எந்த அணி அதிக முறை சாம்பியன் பட்டம் மற்றும் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளதோ, அதன் அடிப்படையில் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன

Recommended Video

IPL 2022 அட்டவணையில் BCCI அதிரடி மாற்றம் : NoHome Advantage For MI | Oneindia Tamil
வான்கடே மைதானம்

வான்கடே மைதானம்

அனைத்து அணிகளும் மும்பை வான்கடே மைதானம் மற்றும் டி.ஓய். பாட்டில் மைதானத்தில் தலா 4 போட்டிகளும், பிராபோர்ன் மைதானம் மற்றும் புனே மைதானம் தலா 3 போட்டிகளும் விளையாடும். இதன் மூலம் மும்பை அணி, வான்கடே மைதானத்தில் அதிக போட்டியில் விளையாடும் என்ற குற்றச்சாட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, February 25, 2022, 17:32 [IST]
Other articles published on Feb 25, 2022
English summary
IPL 2022 schedule – Which Team Play twice From another group புதிய வடிவில் ஐபிஎல் 2022- எந்த அணிகள் 2 முறை மோதுகின்றன..? பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+