Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திறந்தது இந்திய அணி கதவுகள்.. தென்னாப்பிரிக்க தொடரில் தினேஷ் கார்த்திக்.. அதிகாரியின் முக்கிய தகவல்

மும்பை: தினேஷ் கார்த்திக் நீண்ட நாட்களாக போராடி வந்த இந்திய அணியின் கதவுகள் திறந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இந்த முறை தொடக்கத்தில் இருந்தே மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை குவித்து, புள்ளிப்பட்டியலிலும் 4வது இடத்தில் உள்ளது.

தினேஷ் கார்த்திக் அதிரடி

தினேஷ் கார்த்திக் அதிரடி

ஆர்சிபி அணியின் வெற்றிகளுக்கு தூணாக விளங்குபவர் தினேஷ் கார்த்திக் தான். கடந்த சில ஆண்டுகளாக சரிவர கிரிக்கெட்டே ஆடாமல் இருந்த தினேஷ் கார்த்திக் திடீரென அட்டகாச ஃபார்மில் இருக்கிறார். இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 197 ரன்களை சேர்த்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 209.57 ஆகும். ஆர்சிபியில் அதிக ஸ்கோர் அடித்துள்ள வீரர் இவரே ஆகும்.

தினேஷின் ஆசை

தினேஷின் ஆசை

தினேஷ் கார்த்திக் இப்படி ஆடுவதற்கு காரணம், இந்திய அணியில் வாய்ப்பு பெறுவதற்காக தான். டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் ஃபினிஷர் ரோல் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை எனக்கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே தற்போது இந்திய அணியின் வாயில்களும் திறந்துள்ளது.

தேர்வாளரின் பேட்டி

தேர்வாளரின் பேட்டி

இதுகுறித்து பேசிய தேர்வாளர் ஒருவர், டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க தொடர் உள்ளது. தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால், அவரை நன்கு உற்று நோக்கி வருகிறோம். தற்போது வரை எல்லாமே சிறப்பு தான். ஆனால் வெறும் 6 போட்டியை வைத்து முடிவு செய்துவிட முடியாது. இன்னும் 8 - 10 போட்டிகள் வரை மீதமுள்ளது. அதிலும் சிறப்பாக ஆடினால் அவரை புறக்கணிக்க பிசிசிஐ-யிடம் காரணமே இருக்காது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் பல நாட்கள் இருப்பதால் தற்போது அதற்கான பணிகளை செய்து வருகிறோம். அதன்படி, தென்னாப்பிரிக்க தொடரை வைத்து சரி செய்துவிடுவோம். பவுலிங் திறமைகளுடன் கூடிய பவர் ஹிட்டர்களுக்கும் பிசிசிஐ முக்கியத்துவம் கொடுக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 19, 2022, 18:44 [IST]
Other articles published on Apr 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+