Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தவறு செய்துவிட்டார்.. சிஎஸ்கேவின் சொதப்பலுக்கான காரணம்.. ஷேன் வாட்சன் மன வருத்தம்!

மும்பை: ஜடேஜா விஷயத்தில் சிஎஸ்கே அணி மற்றும் தோனி செய்த தவறு குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் மனவருத்தம் அடைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டும் மோசமான முறையில் வெளியேறியுள்ளது.

10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம்.

சிஎஸ்கே சொதப்பல்

சிஎஸ்கே சொதப்பல்

சிஎஸ்கேவின் சொதப்பலுக்கு காரணம் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன்சி பொறுப்பு கொடுத்தது தான். பின்னர் அதனை கடைசி நேரத்தில் தோனிக்கு மீண்டும் கொடுத்தனர். ஆனால் நிலைமை கையைவிட்டு சென்ற பின்னர் தோனியால் கூட அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.

வாட்சன் மன வருத்தம்

வாட்சன் மன வருத்தம்

இந்நிலையில் இதுகுறித்து வாட்சன் பேசியுள்ளார். அதில், ஜடேஜா தான் கேப்டன் என நான் அறிந்தவுடன் அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். ஏனென்றால் அணியிலும், களத்திலும் தோனிக்கு கிடைக்கும் மரியாதை அனைவருக்கும் தெரியும். அதனை ஜடேஜா எப்படி சமாளிக்க முடியாமல் போனது என்பது எனக்கே கவலையாக தான் இருந்தது.

எனக்கும் அதே நிலைமைதான்

எனக்கும் அதே நிலைமைதான்

ராஜஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து நானும் விலகியுள்ளேன். அழுத்தமான சூழலில் பதவி விலகுவது எப்படி வலிக்கும் என்பதை நானும் அறிவேன். இந்த முடிவை எடுத்ததற்காக ஜடேஜாவுக்கு பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும். ஆனால் ஜடேஜாவால் சோபிக்க முடியாமல் போனதற்கு சில காரணங்களும் உண்டு.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Dhoniயை திட்டிய Virat Kohli? | Arjun Tendulkar's Debut?|
காரணம் என்ன

காரணம் என்ன

தோனியை மையப்படுத்தி தான் ஒட்டுமொத்த அணியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் மாற்றலாம். இன்னொரு சாம்பியன் கோப்பையும் வெல்லலாம். ஆனால் அவருக்காக உருவாக்கப்பட்டதை ஜடேஜாவால் எப்படி சமாளிக்க முடியும். அந்த வகையில் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் தவறு செய்துவிட்டது என வாட்சன் மனவருத்தம் அடைந்துள்ளார்.

Story first published: Thursday, May 5, 2022, 21:08 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+