For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பெரும் ஷாக்.. ஆட்டத்தையே மாற்றிய 2 வீரர்கள்.. முதல் போட்டியிலேயே இப்படியா ??

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு வீரர்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றி அமைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 40வது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் முதல் முறையாக வில்லியம்சன் டாஸில் தோல்வியடைந்தார்.

 தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் மிகப்பெரிய தூணே கேப்டன் வில்லியம்சன் தான். எனவே அவரின் விக்கெட்டிற்காக தனி ஸ்கெட்ச் போட்ட ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி மூலம் வில்லியம்சனை 5 ரன்களுக்கு வெளியேற்றினார். அவரை தொடர்ந்து சீனியர் வீரர் ராகுல் திரிபாதியும் 16 ரன்களுக்கு அவுட்டானார்.

இளம் வீரர் தந்த ட்விஸ்ட்

இளம் வீரர் தந்த ட்விஸ்ட்

இதனால் ஐதராபாத் அணி இனி அவ்வளவு தான் என நினைத்த போது, அபிசேஷ் சர்மா பெரும் ஷாக் கொடுத்தார். தூண் போன்று நிலைத்து நின்ற அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களை விளாசித் தள்ளினார். ஹர்திக் வகுத்த அத்தனை வியூகத்தையும் அந்த 21 வயது வீரர் தகர்த்ததால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

 மற்றொரு அதிர்ச்சி

மற்றொரு அதிர்ச்சி

அபிசேக்கிற்கு உறுதுணையாக விளையாடிய ஏய்டன் மர்க்ரம் 40 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். இதனால் 19 ஓவர்களில் ஐதராபாத் அணி 170 ரன்களை குவித்தது. இந்நிலையில் கடைசி ஓவரில் தான் பாண்ட்யாவுக்கு மற்றொரு ஷாக் காத்திருந்தது. அதுவும் இதுவரை ஐபிஎல்-ல் பேட்டிங்கே செய்யாத ஒரு வீரரால் தான்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Virat Kohli Form, Harshal Patel vs Riyan Parag
 கடைசி ஓவர் அதிரடி

கடைசி ஓவர் அதிரடி

கடைசி ஓவரை லாக்கி ஃபெர்க்யூசன் வீச, புதுமுக வீரர் ஷஷாங்க் சிங் களத்திற்கு வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அந்த ஓவரில் 6,0,1,6,6,6 என ரசிகர்களுக்கு சரவெடி காத்திருந்தது. இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்தது.

Story first published: Wednesday, April 27, 2022, 21:47 [IST]
Other articles published on Apr 27, 2022
English summary
Shashank Singh last over batting ( ஷஷாங்க் சிங் பேட்டிங் ) குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஷஷாங்க் சிங் கடைசி ஓவரில் காட்டிய அதிரடி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+