Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட்ரா சக்க..!! கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்.. ஓ.. இதுதான் காரணமா?

சென்னை: கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நடைபெற்று முடிந்தது.

இதில் கடும் போட்டிகளுக்கு இடையே ஸ்ரேயாஸ் ஐயரை ரூ. 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.

புது கேப்டன்

புது கேப்டன்

இந்நிலையில் அவரை அணியின் கேப்டனாகவும் அறிவித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம். ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் சிறந்த அனுபவம் உள்ளவர். இதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். இவரின் கேப்டன்சியில் தான் அந்த அணி 2019ம் ஆண்டு முதல் முறையாக கடந்த 2020ம் ஆண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

வெளியேற்றம்

வெளியேற்றம்

ஆனால் கடந்தாண்டு ஏற்பட்ட காயம் காரணமா ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எனினும் கேப்டன் பதவியை மீண்டும் தராததால் அணியில் இருந்து வெளியேறினார். இந்த தகுதியின் அடிப்படையில் தான் கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

ஸ்ரேயாஸ் நெகிழ்ச்சி

ஸ்ரேயாஸ் நெகிழ்ச்சி

இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், இந்த கொல்கத்தா போன்ற புகழ்பெற்ற அணியை வழிநடத்துவதில் பெருமைக்கொள்கிறேன். ஐபிஎல் தொடர் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு திறமையான வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அதுபோன்ற வீரர்களை வழிநடத்த ஆவலுடன் உள்ளேன். ஈடன் கார்டன் மைதானத்திற்கு பெரும் புகழ் உள்ளது. அந்த புகழில் எனது பங்கும் இனி இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ்

சாம்பியன்ஸ்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. இவை இரண்டுமே முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கேப்டன்சியில் வந்தவை. கடந்த சீசனில் இயான் மோர்கன் தலைமையில் இறுதிப்போட்டி வரை சென்று வெளியேறியது. எனினும் மோர்கனின் பேட்டிங் மோசமாக இருப்பதால் அவரை தக்கவைக்கவில்லை.

Recommended Video

இனி KKR Team-ன் புதிய Captain ஆக நியமனம் செய்யப்பட்ட Shreyas Iyer
கொல்கத்தா அணி விவரம்

கொல்கத்தா அணி விவரம்

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, பேட் கம்மின்ஸ், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், ரகானே, ரிங்கு சிங், அங்குல் ராய், ராஷிக் தார், பாப இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அபிஜீத் டோமர், ப்ரதாம் சிங், அஷோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சௌத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், அமான் கான்

Story first published: Wednesday, February 16, 2022, 17:32 [IST]
Other articles published on Feb 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+