Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா? சாவா? போட்டி.. கடைசி ஆயுதத்தை கொண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. டெல்லிக்கு எதிராக பக்கா வியூகம்!

மும்பை: டெல்லி அணிக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி தேவை என்ற சூழலில் கொல்கத்தா அணி அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இரு அணிகளும் மோதும் 41வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

டெல்லி அணி இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மற்றொரு புறம் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. எனவே கொல்கத்தா அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்க முடியும்.

முக்கிய ஆயுதம்

முக்கிய ஆயுதம்

இதன் காரணமாக தனது முக்கிய ஆயுதத்தை களமிறக்கியுள்ளார். அதாவது அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் காயம் காரணமக கடந்த சில போட்டிகளில் ஆட வில்லை. இதுவே தோல்விக்கு காரணமானது. இந்நிலையில் இன்று ஆரோன் ஃபிஞ்ச்-ஐ மீண்டும் ஓப்பனிங்கிற்கு கொண்டு வந்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

 ஏன் ஃபிஞ்ச் தேவை

ஏன் ஃபிஞ்ச் தேவை

ஆரோன் ஃபிஞ்ச் நடப்பு தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் 65 ரன்களை அடித்தார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக 58 ரன்களை விளாசி அசத்தினார். எனவே இன்றைய போட்டியில் அவரின் கம்பேக் தான் கொல்கத்தா அணிக்கு பவர் ப்ளேவில் ரன்களை சேர்க்கவுள்ளது.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

கொல்கத்தா: ஆரோன் ஃபிஞ்ச், சுனில் நரேன், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், உமேஷ் யாதவ், டிம் சௌத்தி, ஹர்ஷித் ரானா

டெல்லி அணி : பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், லலித் யாதவ், ரோவ்மென் போவெல், அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்திவிசூர் ரஹ்மான், சேட்டன் சக்காரியா

Story first published: Thursday, April 28, 2022, 19:48 [IST]
Other articles published on Apr 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+