சச்சினுக்கு பேட்டால் பதிலடி தந்த சுப்மான்.. ராகுலுக்கு போட்டியாக ஆள் ரெடி.. டெல்லியை ஓடவிட்ட கில்
புனே: ஐபிஎல் 15வது சீசனில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
குஜராத் அணியின் பிளேயிங் வெலனில் எவ்வித மாற்றமும செய்யப்படவில்லை. ஆனால் டெல்லி அணி வங்கதேச புயல் முஸ்தபிகுர் ரஹிம்மை பிளேயிங் லெவனில் சேர்த்தது.
குஜராத் அணியின் தொடக்க வீரராக ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவ் வெடும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.

மேத்திவ் அவுட்
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மேத்தீவ் வெட் விக்கெட்டை முஸ்தபிகுர் ரஹிம் வீழ்த்தினார். இதன் பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் தொடர்ந்து 2வது முறையாக ரசிகர்களை ஏமாற்றினார். இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், சுப்மான் கில்லும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிவிருந்து மீட்டனர்.

பார்ட்னர்ஷிப்
இருவரும் அதிரடியாக விளையாட குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 32 பந்துகளில் அரைசதம் விளாச, ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். டேவிட் மில்லர் 20 ரன்கள், ராகுல் தேவதியா 14 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சுப்மான் அதிரடி
இருப்பினும் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த சுப்மான் கில் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்சரும் அடங்கும். சுப்மான் கில் ஆட்டமிழந்த உடனே மற்ற வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 190 ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட குஜராத் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சச்சினுக்கு பதிலடி
சுப்மான் கில் பேட்டிங் குறித்து அன்மையில் பேசிய சச்சின், சுப்மான் திறமையான வீரராக இருந்தாலும் அவர் பெரிய ஸ்கோர் எடுப்பதில்லை. இதனால் அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தார். தற்போது காயத்திலிருந்து திரும்பியுள்ள சுப்மான் கில் 84 ரன்கள் விளாசி பதிலடி தந்துள்ளார்.


Click it and Unblock the Notifications