“சொன்னது எதையுமே செய்யல” ஐதராபாத் அணியில் இருந்து மற்றொரு ஆஸ்திரேலியர் விலகல்.. நீடிக்கும் சர்ச்சை!
சென்னை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சொல்கின்ற வார்த்தையை காப்பாத்துவதே இல்லை என பரபரப்பை கிளப்பி, விலகியுள்ளார் பயிற்சியாளர் சைமன் கடிச்.
Recommended Video
ஐபிஎல் மெகா ஏலம் முடிந்து சிறிது நாட்களே ஆகின்றன. ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை வைத்து வியூகம் அமைத்து வருகின்றன.
ஆனால் ஐதராபாத் அணிக்கு மட்டும், ஆஸ்திரேலிய வீரர்களுடனான மனக்கசப்பு மீண்டும் பின் தொடர்ந்து வருகிறது.

மெகா ஏலம்
ஐதராபாத் அணி இந்த முறை மெகா ஏலத்தில் பெரியளவில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகிறது. தொடக்கம் முதலே அமைதிகாத்து வந்த அவர்கள், அனுபவம் குறைந்த வீரர்களை கூட அதிக தொகை கொடுத்து சொதப்பியுள்ளதாக தெரிகிறது.

சைமன் திடீர் விலகல்
இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார் சைமன் கடிச். அந்த அணியின் துணைப்பயிற்சியாளராக இருக்கும் அவர் ராஜினாமா செய்துள்ளார். மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டம் போட்டிருந்தோம். ஆனால் அணி நிர்வாகம் அதனை சற்றும் செயல்படுத்தாமல் வேறு ஏதேதோ வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்படிபட்ட அணியுடன் இனியும் பயனிக்க முடியாது என பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஏற்கனவே 4 ஆஸ்திரேலியர்கள்
ஐதராபாத் அணியில் இருந்து வெளியேறும் 4 நபர் சைமன் கடிச் ஆகும். இதற்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்த டேவிட் வார்னர் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியேறினார். அதன்பின்னர் பயிற்சியாளர்கள் ட்ரேவர் பெய்லிஸ், ப்ராட் ஹெட்டின் ஆகியோரும் திடீரென ராஜினாமா செய்து வெளியேறினர்.

பின்னணியில் டாம் மூடி
இதற்கெல்லாம் மறைமுக காரணமாக இருப்பது தலைமை பயிற்சியாளர் டாம் மூடி தான் என கூறப்படுகிறது. அணியில் உள்ள மற்ற நிர்வாகிகளின் எந்தவித கருத்துக்களையும் கேட்காமல் அவரின் முடிவை மட்டுமே கண்மூடித்தனமாக அணி நிர்வாகம் நம்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதன் விளைவு தான் கடந்த சீசனில் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications