“அப்போவே சொன்னேன் கேட்டியா”.. காயத்தால் தவிக்கும் ஹர்திக் பாண்ட்யா.. பாக். ஜாம்பவான் எச்சரிக்கை!
மும்பை: ஹர்திக் பாண்ட்யாவின் காயத்தை முன்கூட்டியே எச்சரித்ததாக பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது.
இதுவரை 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் உள்ளது.

குஜராத் அணியின் சக்ஸஸ்
கடைசியாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த போட்டியில் அதன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாடவே இல்லை. டேவிட் மில்லர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

பாண்ட்யாவுக்கு மீண்டும் காயம்
இது ஒருபுறம் இருக்க, ஹர்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது தான் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதுவும் மீண்டும் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகியிருந்தார். அவர் மீண்டு வர எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

சீனியர் எச்சரிக்கை
இந்நிலையில் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே பாகிஸ்தான் ஜாம்பவான் எச்சரித்திருந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒருமுறை துபாயில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் நான் பேசினேன். அந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியாவின் கை தசைகளை பிடித்துப் பார்த்தபோது அது மிகவும் ஒல்லியாக இருந்தது. இதுபோன்ற குறைவான தசைகள் காயத்தை ஏற்படுத்தவல்லது என்று அப்போதே எச்சரித்தேன்.
Recommended Video

ஹர்திக்கின் பேச்சு
எனினும் ஹர்திக் அப்போது, நான் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறேன் என்பதால் காயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என்று கூறினார். ஆனால் அன்றைய போட்டியிலேயே காயம் ஏற்பட்டது. தசைகள் மிகவும் குறைவாக இருந்தால் நிச்சயம் அடிக்கடி காயம் வரும். இதனை சரி செய்தால் தான் நல்லது என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications