For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கொரோனா வந்தாலும் சரி..” ஐபிஎல் தொடருக்காக சவுரவ் கங்குலி தடாலடி அறிவிப்பு.. அச்சத்தில் வீரர்கள்!

மும்பை: ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தடாலடி முடிவை எடுத்துள்ளார்.

Recommended Video

IPL 2022: Ganguly Reveals the Venues! | OneIndia Tamil

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால், மெகா ஏலம் குறித்த அப்டேட்களை விட பிசிசிஐ தாமதம் ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

கடந்தாண்டு பாதி போட்டிகள் இந்தியாவிலும், பாதி போட்டிகள் அமீரகத்திலும் நடந்ததால் அனைத்து அணிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே இந்த முறை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதை முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இதற்காக பிசிசிஐ அவசர

 கங்குலியின் அறிவிப்பு

கங்குலியின் அறிவிப்பு

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சவுரவ் கங்குலி தடாலடி முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் எவ்வளவு இருந்தாலும் சரி, இந்தியாவில் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். இதில் உறுதியாக உள்ளோம். இந்த முறை போட்டிகளை மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ப்ளே ஆஃப்

ப்ளே ஆஃப்

லீக் போட்டிகள் மகாராஷ்டிராவில் நடந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றுகள் அனைத்தும் அகமதாபாத் நகரத்தில் நடைபெறும். கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்றால் மட்டுமே மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும், இல்லையென்றால் இந்த திட்டம் தான் கடைசி வரை இருக்கும் என கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வீரர்கள் அதிருப்தி

வீரர்கள் அதிருப்தி

கங்குலியின் இந்த துணிச்சல் முடிவு வீரர்களுக்கு தான் பயத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த முறை இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் பல இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவர்களுக்கு சில சர்வதேச போட்டி வாய்ப்புகளும் தவறின. எனவே இந்த முறையும் அப்படி ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதேபோல தென்னாப்பிரிக்காவில் ரம்மியமான சூழல் நிலவுவதால் அங்கு ஐபிஎல் நடக்கும் என காத்திருந்தனர். ஆனால் இந்த முறையும் இந்தியாவில் நடத்தினால், பயோ பபுள் என்ன ஆகப்போகிறது என்ற கவலையும் உள்ளது.

ஐபிஎல் அணிகள் அழுத்தம்

ஐபிஎல் அணிகள் அழுத்தம்

ஐபிஎல் தொடரை நடத்த அமீரகத்துடன் சேர்ந்து இந்த முறை தென்னாப்பிரிக்கா, இலங்கை நாடுகளும் தேர்வுகளாக உள்ளன. ஆனால் அனைத்து அணிகளும் போக்குவரத்து செலவுகளை குறைக்க இந்தியாவில் தான் போட்டிகளை நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. இதன் காரணமாக தான் பிசிசிஐ-ம் ரிஸ்க் எடுக்க துணிந்திருப்பதாக தெரிகிறது.

Story first published: Thursday, February 3, 2022, 16:41 [IST]
Other articles published on Feb 3, 2022
English summary
BCCI President reveals the Venues for IPL 2022, Players are in upset
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+