Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தரமான சம்பவம் ரெடி..இன்றைய ஐபிஎல் போட்டிக்காக பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு.. சிஎஸ்கே மேட்ச்சில் கூட இல்லை

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் முதல் 4 லீக் போட்டிகள் மும்பை நகரத்தில் நடந்த சூழலில் 5வது போட்டி இன்று புனே நகரத்தின் எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் மோதலில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அத்தனை சுவாரஸ்யங்களும் காத்துள்ளன.

ஸ்பெஷல் போட்டி

ஸ்பெஷல் போட்டி

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் படு தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளன. இரு அணிகளும் இதுவரை மோதிய 15 போட்டிகளில் 8 முறை ஐதராபாத் அணியும் 7 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதற்காக மைதான தேர்வில் கூட பிசிசிஐ ஸ்பெஷல் கவனத்தை செலுத்தியுள்ளது.

அதிரடி பிட்ச்

அதிரடி பிட்ச்

புனே மைதானத்தை பொறுத்தவரையில் பேட்டிங்கிற்கு தரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியவை. இதனால் சராசரியாக இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 170 ரன்களுக்கு மேல் குவிக்கும் என தெரிகிறது. மும்பை மைதானங்களில் சிகப்பு நிற மண் இருந்ததால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியது. ஆனால் புனேவில் கருப்பு மண் இருக்கும் என்பதால் ஸ்பின்னர்களின் ராஜ்ஜியம் இருக்கும். புனே மைதானத்தை பொறுத்தவரையில் பேட்டிங்கிற்கு தரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியவை. இதனால் சராசரியாக இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 170 ரன்களுக்கு மேல் குவிக்கும் என தெரிகிறது. மும்பை மைதானங்களில் சிகப்பு நிற மண் இருந்ததால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியது. ஆனால் புனேவில் கருப்பு மண் இருக்கும் என்பதால் ஸ்பின்னர்களின் ராஜ்ஜியம் இருக்கும்.

அணி வீரர்கள் விவரம்

அணி வீரர்கள் விவரம்

ப்ளேயிங் 11 ஐ பொறுத்தவரையில் இரு அணிகளுமே அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டதாக இருக்கிறது. ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பட்டிக்கல், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். மற்றொரு புறம் ஐதராபாத் அணியில் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மர்க்கரம், நிகோலஸ் பூரண், அப்துல் சமாத் என பல கிளாசி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

எதிர்பார்க்கும் ரசிகர்கள்

எதிர்பார்க்கும் ரசிகர்கள்

நடப்பு சீசனின் முதல் போட்டியில் சென்னை அணி மும்பையின் வான்கடே மைதானத்தில் தான் விளையாடியது. அங்கு ரன் மழை பொழியும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் இன்று புனேவில் நடக்கும் இந்த போட்டியில் நிச்சயம் பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 29, 2022, 15:21 [IST]
Other articles published on Mar 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+