Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே.. புவனேஸ்வர் குமாருக்கு இப்படியா நடக்கனும்.. ஆண்டி கிளைமாக்ஸ் ஆன முதல் ஓவர்

புனே: ஐபிஎல் 15வது சீசனில் 5வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் பந்துவீசுவதாக அறிவித்தார். இதுவரை ஐதராபாத் அணிக்கு எதிராக 5 முறை ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது.

இதில் ஒரு முறை தான் ரொஜஸ்தான் வென்றுள்ளது, இது ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் களமிறங்கும் 100வது ஐபிஎல் போட்டியாகும்.

7 பேர் அறிமுகம்

7 பேர் அறிமுகம்

இந்த தொடரில் ராஜஸ்தான் அணியும், ஐதராபாத் அணியும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ஐதராபாத் அணியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரஷித் கான் இல்லாமல் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. இதே போன்று வார்னரும் இம்முறை அணியில் இல்லை. இதே போன்று 7 வீரர்கள் நடப்பு சீசனில் முதல் முறையாக ராஜஸ்தான் அணியில் களமிறங்குகின்றனர்.

ஆண்டி கிளைமாக்ஸ்

ஆண்டி கிளைமாக்ஸ்

முதல் ஓவரை அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார் வீசினார். புது பந்தை புவி நன்றாக ஸ்விங் செய்ததால் ஜாஸ் பட்லர் ரன் குவிக்க தடுமாறினார். இந்த நிலையில், புவனேஸ்வர் குமார் வீசிய 5வது பந்தில் ஜாஸ் பட்லர் துரத்தி அடித்து சிலிப்பில் கேட்ச் ஆனார். இதனால் ஐதராபாத் அணி வீரர்கள் பட்லர் விக்கெட்டைய கொண்டாடினர்.

நோ பால்

நோ பால்

ஆனால், அது நோ பால் என்று மூன்றாம் நடுவர் அறிவித்தார். இதனால் ஜாஸ் பட்லருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இதே போன்று 2வது ஓவரிலும் புவி, ஒரு நோ பால் வீச, அதன் பிறகு பந்த பவுண்டரிக்கு பறந்தது. புவனேஸ்வர் குமார் வீசிய நோ பால் விக்கெட் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நோ பால் மழை

நோ பால் மழை

ஜாஸ் பட்லர் போன்ற வீரருக்கு எதிரணி ஒரு லைஃப் கொடுத்தால், அவர் சும்மா விடுவாரா என்ற ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்று உம்ரான் மாலிக் பட்லருக்கு ஒரு நோ பால் வீசினார். ஐதராபாத் அணி 4 ஓவருக்குள் 4 நோ பால் வீசியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வாழ்வா சாவா ஆட்டத்தில் நோ பாலில் விக்கெட் எடுத்து , அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 29, 2022, 20:28 [IST]
Other articles published on Mar 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+