
ஸ்டார் நடராஜன்
இதன் மூலம் வார்னரின் செல்லப் பிள்ளை போல் மாறிய நடராஜனுக்கு 2020ஆம் ஆண்டு ஆஸதிரேலிய தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் அசத்திய நடராஜன், விஜய் அஜித் போன்ற சினிமா நட்சத்திரங்களுக்கு ஈடு இணையாக ஸ்டாராக உயர்ந்தார். நடராஜன் சொந்த ஊர் திரும்பியதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காயம்
ஆனால் அதன் பின்னர் நடரானுக்கு கொரோனா தொற்று, காலில் காயம், அறுவை சிகிச்சை என தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்தால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும் கடந்த 4 மாதமாக காயத்திலிருந்து குணமடைந்து உடல் தகுதியை பெற்ற நடராஜன், மீண்டும் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக திரும்பினார்.

ரன்கள் சென்றன
4 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு நடராஜன் திரும்பினார். முதல் பந்தில் பவுண்டரி சென்றாலும் பின்னர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 6 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் விட்டு கொடுத்தார். இருப்பினும் நடராஜனின் 2வது ஓவரில் 13 ரன்கள் விட்டு கொடுத்தார். இதே போன்று நடராஜன் வீசிய 3வது ஓவரிலும் 18 ரன்கள் சென்றது.

யாக்கர் கிங்
இதனைத் தொடர்ந்து 4வது ஓவரும் நடராஜனுக்கு தரப்பட்டது. அதில் அவர் தனது உண்மையான திறமையை வெளிப்படுத்தினார். அந்த ஓவரில் நடராஜன் ஹேட்மருக்கு தனது டிரெட் மார்க் யாக்கரை வீச ஸ்டம்புகள் சிதற ஹேட்மர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 4 யாக்கரை வீச, கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் நடராஜன் ஃபார்ம்க்கு திரும்பியதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











