For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-ல் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஐதராபாத் அணி.. காரணம் என்ன ?

மும்பை: ஐதராபாத் அணி சிக்கலான நிலையில் இருக்கும்போது கேன் வில்லியம்சன் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Recommended Video

IPL-ல் இருந்து Kane Williamson Ruled out ஆனார்! சிக்கலில் SRH | OneIndia Tamil

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

ப்ளே ஆஃப் ரேஸ்

ப்ளே ஆஃப் ரேஸ்

நடப்பு தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன

கேன் வில்லியம்சன் விலகல்

கேன் வில்லியம்சன் விலகல்

இந்நிலையில் அணிக் கேப்டன் கேன் வில்லியம்சன் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். இதுமட்டுமல்லாமல் அவசர அவசரமாக அணியின் பயோ பபுளை விட்டு வெளியேறிய அவர் நியூசிலாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

வில்லியம்சன் விலகியதற்கு ஒரு நற்செய்தி தான் காரணம். அதாவது வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது. மனைவியின் பிரசவத்திற்காக தான் வில்லியம்சன் புறப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்திருந்த சூழலில் தற்போது 2வது குழந்தை பிறக்கவுள்ளது.

சிக்கலில் ஐதராபாத் அணி

சிக்கலில் ஐதராபாத் அணி

நடப்பு சீசனில் கேப்டனாக வில்லியம்சன் சிறப்பாக இருந்த போதும், பேட்ஸ்மேனாக வில்லியம்சனுக்கு சரியாக செல்லவில்லை. 13 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசத்தை மட்டுமே அடித்துள்ளார். அவரின்றி இனி அந்த அணி எப்படி கையாளப்போகிறது என்ற பதற்றம் நிலவுகிறது.

Story first published: Wednesday, May 18, 2022, 13:07 [IST]
Other articles published on May 18, 2022
English summary
IPl 2022: SRH Captain Kane williamson Ruled out of IPL 2022, Flying to Newzealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+