Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- விதியை மீறிய வில்லியம்சன்.. நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாரிஸ்டோ.. வெடித்த சர்ச்சை

மும்பை: ஐபிஎல் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ஐதராபாத் அணியும் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீசியது.

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டார். இந்தப் போட்டியின் போது ஒரு சர்ச்சை ஏற்பட்டது.

ஆட்டத்தின் 5வது ஓவரில் நடராஜன் வீசிய பந்தை சிம்ரன்சிங் எதிர்கொண்டார். அப்போது பந்து அவரது பேட்டில் பட்டு கீப்பரிடம் கேட்ச் ஆனது.

டிஆர்எஸ் விதி

டிஆர்எஸ் விதி

இதற்கு நடுவரிடம் ஐதராபாத் அணி வீரர்கள் அவுட் கேட்டனர். ஆனால் நடுவர் தரவில்லை. இதனையடுத்து, இதற்கு டிஆர்எஸ் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று வில்லியம்சன் குழப்பத்தில் இருந்தார். ஆனால் விக்கெட் கீப்பர் பூரானும்,நடராஜனும் மூன்றாம் நடுவரின் மறு ஆய்வுக்கு கேட்கும் மாறு வலியுறுத்தினர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இந்த நிலையில், வில்லியம்சன் டிஆர்எஸ் கேட்பதற்கும், அதற்காக அவகாசம் முடிவதற்கும் சரியாக இருந்தது. எனினும் இதனை கண்டுகொள்ளாத கள நடுவர், வில்லியன்சனின் டிஆர்எஸை ஏற்று கொண்டார். இதனை பார்த்த எதிர்முனையில் நின்ற பஞ்சாப் அணியின் பாரிஸ்டோ, அவகாசம் முடிந்தும் எப்படி நீங்கள் டிஆர்எஸ்க்கு அனுப்பலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

முடிவு மாற்றம்

முடிவு மாற்றம்

அதற்கு நடுவர், அவர் கடைசி ஒரு விநாடியில் தான் கேட்டார். நேரம் முடியவில்லை என்று விளக்கம் அளிக்க, அதனை பாரிஸ்டோ ஏற்று கொள்ளவில்லை. ஆனால் மறுஆய்வில் பந்து பேட்டில் பட்டு, அது விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தது தெளிவாக தெரிந்தது. இதனையடுத்து கள நடுவர் தனது முடிவை மாற்றி அவுட் என்று அறிவித்தார்.

சர்ச்சை

சர்ச்சை

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவகாசம் முடிந்தும் வில்லியம்சன் எப்படி கேட்கலாம் என்றும், அவகாசம் முடிவதற்குள் வில்லியம்சன் கேட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் இருத்தரப்பாக பிரிந்து தற்போது சமூக வலைத்தளத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, April 17, 2022, 19:09 [IST]
Other articles published on Apr 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+