For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காவ்யா மாறனின் அதிருப்தி.. வில்லியம்சனுக்கு வந்த தலைவலி.. மும்பை அணியை நம்பி இருக்கும் ஐதராபாத்!

மும்பை: ஐதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான கடைசி நம்பிக்கையாக மும்பை அணிதான் உள்ளது.

ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ஐதரபாத் அணிக்கு இது வாழ்வா? சாவா? போட்டியாகும்.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் தான் வரும். எனினும் மற்ற அணிகளின் வெற்றியை பொறுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம்.

ஐதராபாத் அணிக்கு சிக்கல்

ஐதராபாத் அணிக்கு சிக்கல்

ஆனால் நடப்பாண்டும் அந்த அணிக்கு சரியாக அமையவில்லை. தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்ற ஐதராபாத், தொடர்ச்சியாக 5 தோல்விகளை பெற்றுள்ளது. இதனால் இன்றாவது கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இன்று தோற்றுவிட்டால், அதிகாரப்பூர்வமாக மற்றொரு அணி வெளியேறிவிடும்.

ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

இந்நிலையில் அணி வீரர்களிடம் உரிமையாளர் காவ்யா மாறன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் போது ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை?

அந்த அணிக்கு தற்போது வரை ஓப்பனிங் ஜோடி சரியாக அமையாதது தான் பிரச்சினையாக உள்ளது. அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடிய போதும், மற்றொருபுறம் கேப்டன் கேன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் இல்லை. இதுவரை 12 போட்டிகளில் 208 ரன்களை அடித்துள்ளார். எனவே இன்று கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மும்பை அணி கட்டாயம்

மும்பை அணி கட்டாயம்

மற்றொருபுறம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது. அந்த அணி வெறும் 3 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. எனவே கடைசி இடத்தில் தொடரை முடித்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக மும்பை அணி உள்ளது. இதனால் நிறைய மாற்றங்களுடன் இருக்கின்றனர்.

Story first published: Tuesday, May 17, 2022, 18:28 [IST]
Other articles published on May 17, 2022
English summary
MI vs SRH match ( மும்பை இந்தியன்ஸ் vs ஐதராபாத் போட்டி ) மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்றகட்டாயத்தில் ஐதராபாத் அணி உள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+