Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம முரளிதரனா இது? விட்டா அடிச்சிருப்பாரு போல.. டக் அவுட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

Recommended Video

IPL 2022: கோபத்தில் கத்திய Muralitharan.. மிரண்டு போன வர்ணனையாளர்கள்

196 ரன்களை இலக்காக நிர்ணயித்தும், ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது தான் சோக கதை.

அதுவும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. யான்சென் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 சிக்சர்கள் பறக்க, குஜராத் த்ரில் வெற்றி பெற்றது.

சிரித்த முகம்

சிரித்த முகம்

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளன. ஐதராபாத் அணியில் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் செயல்படுகிறார். முரளிதரன் என்றாலே அந்த சிரித்த முகமும், பந்து வீசும் போது முகப் பாவனையும் தான் நினைவுக்கு வரும்.

முட்டை வீச்சு

முட்டை வீச்சு

முரளிதரன் டெஸ்ட் போட்டியில் பந்து வீசும் போது நடுவர் அதனை நோ பால் என அறிவித்த போதிலும், காரணம் கேட்டதற்கு பவுலிங் ஆக்சன் சரியில்லை என்று சொன்னதற்கும் மனிதன் தனது அக்மார்க் சிரிப்பையே வெளிப்படுத்தினார். அவ்வளவு ஏன் நிறவெறி காரணமாக ஆஸ்திரேலியாவில் முரளிதரன் மீது முட்டை வீசப்பட்டது.

அமைதியின் உருவம்

அமைதியின் உருவம்

அப்போது கூட நீ ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டுவேன் என அமைதியின் உருவாக விளங்கினார். கிரிக்கெட் வீரருக்கு அமைதி பரிசு வழங்கினால், அது முரளிதரனுக்கே கிடைக்கும். அப்படிப்பட்ட முரளிதரன் நேற்று என்ன செய்தார் தெரியுமா? நேற்றைய ஆட்டத்தில் யான்சென் ஓவரில் சிக்சர் பறந்தன.

கத்திய முரளிதரன்

இதனை பார்த்து முரளிதரன் டென்சன் ஆகிவிட்டார். டக் அவுட்டில் அமர்ந்திருந்த அவர் எழுந்து நின்று கோபமாக (நிச்சயமாக அது கெட்ட வார்த்தை தான்) கத்தினார். முரளிதரன் கத்தியதும், சக அணி நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்ட கிரிக்கெட் வர்ணனையாளர்களும், தங்கள் வாழ்வில் முரளிதரன் இப்படி கோபப்பட்டு பார்த்தது இல்லை என்று தெரிவித்தனர்.

Story first published: Thursday, April 28, 2022, 10:36 [IST]
Other articles published on Apr 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+