For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப தான சொன்னீங்க..? திரும்பவுமா? தமிழக வீரர் மீது கடுப்பான ஐதராபாத் அணி

மும்பை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் தான் சர்ச்சையில் சிக்கினார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒன்றரை கோடி அடிப்படை விலை கொண்ட வாசிங்டன் சுந்தரை , 8 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஐதராபாத் அணி வாங்கியது.

இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், பேட்டிங்கும் பந்துவீச்சிலும் சும்மா கில்லி மாதிரி செயல்படுவார் என ரசிகர்களும் நம்பினர்.

IPL 2022 – SRH Player Washington sundar again injured

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் கூட வாசிங்டன் சுந்தர் தன் திறமையை நிரூபித்தார்.அதற்கு பிறகு உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சரிவை நோக்கி சென்றார். காயம், கொரோனா, காயம் என இந்த மூன்று மட்டும் தான் அவர் வாழ்க்கையில் நடந்தது.

இந்திய அணி வாய்ப்பு மீண்டும் அவர் கதவை தட்ட அப்போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஒரு வழியாக உடல்தகுதியை அடைந்து, ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். ஆனால் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சன்ரைசர்ஸ் நிர்வாகம், பரவாயில்லை வளரும் பிள்ளை தானே என்று பொறுமை காத்தது.

இந்த நிலையில சிஎஸ்கேக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் வாசிங்டன் சுந்தருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் நிர்வாகமும், ரசிகர்களும் கடுப்பில் உள்ளனர். வாசிங்டனுக்கு திறமை இருந்தாலும், அவருக்கு ஏற்படும் காயம், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு தடைக் கல்லாக மாறிவிட்டது.

Story first published: Monday, May 2, 2022, 21:13 [IST]
Other articles published on May 2, 2022
English summary
IPL 2022 – SRH Player Washington sundar again injured வாசிங்டன் சுந்தருக்கு மீண்டும் காயம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+