உப்புக்கு சப்பு இல்லாத போட்டி..? யார் சொன்னது ? கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் சம்பவங்கள்
மும்பை: ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே 4 அணிகளும் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று உப்புக்கு சப்பு இல்லாத கடைசி ஆட்டம் நடைபெற்றது.

இருப்பினும், பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதிய இந்த அட்டத்தில் ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்திலும், ஹாட் ஸ்டாலிரும் கண்ட களித்தனர்.
இந்தப் போட்டிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில், ஹாட் ஸ்டாரில் 26 லட்சம் பேர் வரை கண்டு களித்தனர்.
Recommended Video
டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரியாம் கார்க் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஐபிஎல் தொடரில் ரபாடா 99வது விக்கெட்டை கைப்பற்றினார். அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 32 பந்தில் 43 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் நடப்பு சீசனில் 400 ரன்கள் மேல் அபிஷேக் சர்மா அடித்தார்.
இந்திய அணியில் இடம் கிடைக்காத ராகுல் திரிபாதி 20 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். ஏய்டன் மார்க்ரம் 21 ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி சரிவை நோக்கி சென்றது. இறுதியில் வாசிங்டன் சுந்தர் 25 ரன்களிலும், ரோமரியோ ஷிஃபர்ட் 2 சிக்சர்கள், 2 பவுண்டரி என 26 ரன்களும் எடுத்தனர்.
எனினும் இறுதி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியின் நாதன் எலிஸ், ஹர்பித் பிரார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications