என்னது இவர் விளையாடுறாரா.. ஐதராபாத் அணியில் இணைந்த ஸ்டெயின்.. டாம் மூடி சூசகம்
மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரான், , நடராஜன் ஆகியோர் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சி முகாம்க்கு புவனேஸ்வர் குமார், வாசிங்டன் சுந்தர், டேல் ஸ்டெயின் ஆகியோர் வந்தடைந்தனர்.
அப்போது, வீரர்களை வரவேற்று பேசிய டாம் மூடி, வாசிங்டன் சுந்தர் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அளிக்கிறேன். புவனேஸ்வர் குமார் ஐதராபாத் அணியின் முக்கியமான வீரர். இன்னொரு ஜாம்பவான் நம்முடன் இணைந்துள்ளார் என்று ஸ்டெயினை பார்த்து கூறிய டாம் மூடி, ஆனால் விளையாடுவதற்கு அல்ல பயிற்சி அளிக்க என்று கூறியுள்ளார்.
ஸ்டெயின் வருகை, ஐதராபாத் அணிக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும். அவருடன் பயிற்சி எடுப்பதன் மூலம் புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன், கார்த்திக் தியாகி ஆகியோர் தங்களது திறனை வளர்த்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதே போன்று பேட்டிங் பயிற்சியாளராக பிரைன் லாரா செயல்படுகிறார்.
இதன் மூலம் அப்துல் சமத், ராகுல் திரிபாதி, அபிசேக் சர்மா, பிரயாம் கார்க் ஆகியோர் நல்ல பயன் பெறுவார்கள். ஐதராபாத் அணி வார்னர் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் இழந்தாலும் பெரும்பாலும் இளம் வீரர்களை களம் காண்கின்றனர்.


Click it and Unblock the Notifications