For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் – டாஸ் போது நிகழ்ந்த காமெடி.. வில்லியம்சனுக்காக முடிவு எடுத்த வர்ணனையாளர்.. 7 பேர் அறிமுகம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் இதுவரை 8 அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடிய நிலையில், முதல் முறையாக ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தப் போட்டி முதல் முறையாக புனே நகரத்தின் எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆனால் இங்கும் அதே பனிப்பொழிவு சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெஷல் போட்டி

ஸ்பெஷல் போட்டி

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் படு தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளன. இரு அணிகளும் இதுவரை மோதிய 15 போட்டிகளில் 8 முறை ஐதராபாத் அணியும் 7 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஆர்ஆர் அணிக்காக 100வது ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்குகிறார். இதனால் அவருக்கு ஸ்பெஷல் போட்டி என்றே சொல்லலாம்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

புனே மைதானத்தை பொறுத்தவரையில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே அதிக போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானம் போல் இல்லாமல் இங்கு சுழற்பந்துவீச்சாளர்கள் சற்று ஆதிக்கம் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வார்னர், ரஷித் கான் இல்லாமல் விளையாடும் ஐதராபாத் அணி எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். .

அணி விவரங்கள்

அணி விவரங்கள்

ராஜஸ்தான அணியை பொறுத்தவரை 7 பேர் முதல் முறையாக இந்த அணிக்காக விளையாடுகின்றனர். பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஜெய்ஸ்வால், ஷிம்ரன் ஹேட்மர், அஸ்வின், சாஹல் என பலமான வீரர்களை கொண்ட அணியாக விளங்குகிறது. 6 மாதத்திற்கு பிறகு வில்லியம்சன் முதல் முறையாக கிரிக்கெட் களத்துக்கு திரும்பியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் செம பார்மில் உள்ளது, ஐதராபாத் அணிக்கு பலமாக கருதப்படுகிறது

எதிர்பார்க்கும் ரசிகர்கள்

எதிர்பார்க்கும் ரசிகர்கள்

நடப்பு சீசனின் முதல் போட்டியில் சென்னை அணி மும்பையின் வான்கடே மைதானத்தில் தான் விளையாடியது. அங்கு ரன் மழை பொழியும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் இன்று புனேவில் நடக்கும் இந்த போட்டியில் நிச்சயம் பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 29, 2022, 19:21 [IST]
Other articles published on Mar 29, 2022
English summary
IPL 2022 – SRH VS RR – Toss and & New Players Playing for RR ஐபிஎல் – டாஸ் போது நிகழ்ந்த காமெடி.. வில்லியம்சனுக்காக முடிவு எடுத்த வர்ணனையாளர்.. 7 பேர் அறிமுகம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+