
கோலி கோல்டன் டக்
மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீசியது. தொடக்கம் முதலேயே ஐதராபாத் அணியின் அதிரடி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூரு வீரர்கள் திணறினர்.யான்வீசிய ஓவரில் ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ்5 ரன்களில் ஆட்டமிழக்க, பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் டக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
அதே ஓவரின் கடைசி பந்தில் அனுஜ் ராவத் நடையை கட்ட, ஒரே ஓவரில் ஆர்சிபி 3 விக்கெட்டை இழந்தது. சரி, மேக்ஸ்வெல் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 12 ரன்களில் வெளியேறினார். இதனால் 20 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாய் பிரபுதேசாய் 15 ரன்கள் மட்டுமே எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

68 ஆல் அவுட்
இந்த சீசனில் அதிரடியை காட்டிய தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 16.1வது ஓவரில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐதராபாத் அணியில் யான்சென், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நடப்பு சீசனில் குறைந்தபட்ச ஸ்கோரை ஆர்சிபி பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஐதராபாத் அபாரம்
இதனையடுத்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியை காட்டினர். வில்லியம்சன் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க, அபிஷேக் சர்மா வழக்கம் போல் ரன்களை குவித்தார். 28 பந்துகளில் 47 ரன்களில் சேர்க்க, ஐதராபாத் அணி வெற்றி இலக்கை 8 ஓவரிலேயே எட்டி அசத்தியது. இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணியின் ரன் ரேட் கடுமையாக சரிந்தது.


Click it and Unblock the Notifications











