
சிஎஸ்கே பரிதாபம்
நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. தீபக் சஹார் இல்லாதது தான் இந்த முறை பின்னடைவாக அமைந்தது. ஏப்ரல் 26ம் தேதிக்குள் வந்துவிடுவார் எனக் கூறப்பட்ட போதும் 2வது காயத்தால் அது நிறைவேறவில்லை. இது ஒருபுறம் இருக்க, அணியின் மற்றொரு பவுலர் ஆடம் மில்னேவும் காயத்தால் வெளியேறினார். இதனால் சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த பவுலிங் படையும் பலவீனமானது.

மாற்று அறிவிப்பு
இந்நிலையில் ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே அறிவித்துள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். 19 வயதே ஆகும், இவர் U 19 உலகக்கோப்பை தொடரில் கலக்கினார். 4 போட்டிகளில் 7 விக்கெட்களை சாய்த்தார். அவரின் எகானமி ரேட்டும் 6.16 தான் ஆகும்.

மலிங்காவின் ஸ்டைல்
மதீஷா பதிரானா மலிங்காவை போன்ற ஸ்டைலில் பந்துவீசக்கூடியவர். சென்னை அணியில் ஏற்கனவே மஹீஷ் தீக்ஷணா பவுலிங்கில் கலக்கி வருகிறார். இந்நிலையில் 2வதாக ஒரு இலங்கை வீரர் சேர்க்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஹாருக்கு மாற்று
எனினும் சென்னை அணியால் தீபக் சஹாருக்கு மாற்று வீரர் ஒருவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. பல நாட்களாக ஆலோசனைகள் மேற்கொண்ட போதும், தீபக் சஹாருக்கு சரிசமமான இந்திய பவுலர்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்காக தோனி தனியாக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











