Recommended Video

ஐபிஎல் 2021 வருமானம்
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை அதிக லாபம் கொடுத்த ஆண்டு என்றால் அது கடந்த சீசன் தான். இதில் சிஎஸ்கே அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் விளம்பரம் மூலம் மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 3200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இதனால் இந்த ஆண்டிற்கான விளம்பர ஓப்பந்தம் படு ஜோராக நடைபெறுகிறது.

கடும் போட்டி
ஒவ்வொரு நிறுவனமும் விளம்பரத்திற்காக கடுமையாக போட்டி போடுவதால், என்ன செய்வது எனறு அறியாமல் முழித்த ஸ்டார் நிறுவனம் விளம்பரத்திற்கான தொகையை உயர்த்தியது. கடந்த ஆண்டை விட 20 சதவீதம் தொகை உயர்த்தப்பட்டும், ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே 90 சதவீதம் விளம்பர நேரங்கள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது.

5 ஆயிரம் கோடி
இதன் மூலம் ஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி மூலம் 4200 கோடி ரூபாய் முதல் 4400 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட உள்ளது. மேலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் விளம்பரம் மூலம் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதனால், நடப்பு சீசனில் ஸ்டார் நிறுவனத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை விளம்பரம் மூலம் வருமானம் கிடைத்துள்ளது.

40 ஆயிரம் கோடி
இதனை கணக்கு வைத்து பார்த்தால், இனி அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை பிசிசிஐ ஏலத்தில் விற்றால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிசிசிஐக்கு வருமானம் கிடைக்கும். இதன் மூலம் உலகின் பணக்கார விளையாட்டு தொடரில் ஒன்றாக ஐபிஎல் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











