Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவை வாங்கவுள்ள முன்னணி அணி.. அதுவும் ரூ. 8 கோடிக்கு.. ஆர்வம் காட்டாத தோனி!

பெங்களூரு: மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை முன்னணி அணி ஒன்று குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. மிடில் ஆர்டரில் இவரின் பேட்டிங்கை கண்டு பவுலர்களே மிரண்டுள்ளனர்.

ஆனால் கடந்த சீசனில் இவரின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக முதல் முறையாக ப்ளே ஆஃப் போட்டிகளில் ரெய்னா இன்றி விளையாடினார் தோனி.

கைவிட்ட எம்.எஸ்.தோனி

கைவிட்ட எம்.எஸ்.தோனி

மெகா ஏலத்திற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டத்தில் இந்த முறை சுரேஷ் ரெய்னா இருக்க மாட்டார். அணி நிர்வாகத்திற்கு விருப்பம் இல்லாததால், தோனியும் அவர் குறித்து ஏதும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே ரெய்னாவுக்கு இனி ஐபிஎல் எதிர்காலம் கேள்விக்குறி தான் என்ற சூழல் உருவாகியுள்ளது.

குறிவைத்த முன்னணி அணி

குறிவைத்த முன்னணி அணி

இந்நிலையில் ரெய்னாவை ஏலம் எடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி திட்டமிட்டுள்ளது. ஆர்சிபி அணிக்கு கடந்த காலங்களில் ஓப்பனிங் சிறப்பாக இருந்த போதும், மிடில் ஆர்டர் தான் பெரிய பிரச்சினையாக இருந்தது. அதனை சரி செய்யவே அனுபவ வீரரான சுரேஷ் ரெய்னா மீது நம்பிக்கை வைத்து எடுக்க விராட் கோலி பரிந்துரைத்துள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னா ரூ. 2 கோடியை தனது அடிப்படை தொகையாக பதிவு செய்துள்ளார். அவரை எந்த அணியும் பெரிதாக கண்டுக்கொள்ளாது என்பதால், அடிப்படை தொகையிலோ அல்லது ரூ. 5 கோடி வரை செலவு செய்தோ எடுத்துவிட வேண்டும் என ஆர்சிபி முயன்று வருகிறது. இதன் மூலம் குறைந்த செலவில் முன்னணி வீரர் மிடில் ஆர்டருக்கு கிடைத்து விடுவார்.

கூடுதல் சிறப்பு

கூடுதல் சிறப்பு

ரெய்னாவை அணிக்குள் எடுப்பது ஆர்சிபியின் கேப்டன்சிக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். புதிதாக வரும் கேப்டனுக்கு ரெய்னாவின் அனுபவம் உதவும். இதே போல தோனியின் முக்கிய வியூகங்கள் அனைத்து ரெய்னாவுக்கு தெரியும் என்பதால், சிஎஸ்கேவை சுலபமாக சமாளிக்க முடியும்.

Story first published: Thursday, February 10, 2022, 14:09 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+