Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரரே இல்லை.. டாஸிலேயே சிஎஸ்கே எடுத்த ரிஸ்க்.. பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெறுமா???

மும்பை: மிகப்பெரிய பரிசை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணி போட்டி

சென்னை அணி போட்டி

புள்ளிப்பட்டியலில் 2 வெற்றிகளுடன் 9வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. ஏனென்றால் இந்த ஒரு வெற்றியின் மூலம் அவர்கள் 6வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். ப்ளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகும். இப்படிபட்ட முக்கியமான போட்டியில் ஒரு வீரரை சிஎஸ்கே மிஸ் செய்துள்ளது.

 முக்கிய வீரர் மிஸ்ஸிங்

முக்கிய வீரர் மிஸ்ஸிங்

சென்னை அணியின் மிடில் ஆர்டரில் நம்பிக்கையாக விளங்கும் மொயீன் அலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக மிட்செல் சாண்ட்னர் கொண்டு வரப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மும்பைக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசி 1/16 என சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

முதலில் பவுலிங் என ஜடேஜா எடுத்த முடிவு சரியா என்பது சந்தேகமே. ஏனென்றால் நேற்று இதே வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி தான் வெற்றி பெற்றது. 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்குமா என்பது சந்தேகம் தான். எனினும் நம்பிக்கை வைத்து இந்த முடிவை எடுப்பதாக ஜடேஜாவே தெரிவித்தார்.

Recommended Video

PBKS vs CSK: Ruturaj Gaikwad மோசமான செயலால் பெரும் அடிவாங்கிய CSK | Oneindia Tamil
ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

சிஎஸ்கே: ருதுராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, மிட்செல் சாண்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, முகேஷ் சௌத்ரி, மகீஷ் தீக்‌ஷணா

பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா, பனுக்கா ராஜபக்சா, ரிஷி தவான், ககிஸ்கோ ரபாடா, ராகுல் சஹார், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்

Story first published: Monday, April 25, 2022, 20:01 [IST]
Other articles published on Apr 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+