மார்ச் 26 முதல் மே 29 வரை.. ஐபிஎல் முக்கிய அப்டேட் வெளியானது.. எங்கெங்கு எத்தனை போட்டிகள். - விவரம்!
மும்பை: ஐபிஎல் தொடரின் தேதிகள், எத்தனை போட்டிகள், எந்தெந்த மைதானங்கள் என்ற முழு அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த முறை 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால்,மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பிசிசிஐ தீவிரமாக செய்து வருகிறது. விரைவில் அட்டவணை வெளியாகும்.

ஐபிஎல் தேதிகள்
இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 27ம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வெளியானது. பின்னர் பிசிசிஐ அதனை மார்ச் 26ம் தேதிக்கு மாற்றியுள்ளது. மொத்தமாக 2 மாதங்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் வரும் மே. 29ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் திட்டம்
கொரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால் இந்தாண்டு போட்டிகளை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் மட்டும் நடத்தப்படவுள்ளது. அதன்படி ப்ளே ஆஃப் சுற்றுகள் மட்டும் அகமதாபாத்திலும், லீக் போட்டிகள் அனைத்தும் மீதமுள்ள மைதானங்களில் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைதான விவரங்கள்
அதன்படி இந்த முறை மொத்தமுள்ள 70 லீக் போட்டிகளில் 55 போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே, ப்ராபேர்ன் ஸ்டேடியம், DY பாட்டில் ஸ்டேடியம் ஆகியவற்றில் நடைபெறும். மீதமுள்ள 15 போட்டிகள் புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெறும். ப்ளே ஆஃப் சுற்றுகள் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அணிகளுக்கான திட்டம்
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த மைதானத்தில் எத்தனை போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வான்கடே - 4 போட்டிகள்
DY பாட்டில் - 4 போட்டிகள்
ப்ராபோர்ன் - 3 போட்டிகள்
புனே - 3 போட்டிகள்


Click it and Unblock the Notifications