For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடி தூள்..!! சிஎஸ்கேவின் பலம் மற்றும் பலவீனம் என்ன??.. ப்ளேயிங் 11.. தோனி ப்ளான்.. முழு விவரம் இதோ

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம், ப்ளேயிங் 11 ஆகிய விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கம் போல நடப்பு சாமியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கூட இது இருக்கலாம் என்பதால் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதன்படி அந்த அணியின் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

சிஎஸ்கே பலம்

சிஎஸ்கே பலம்

சென்னை அணியை பொறுத்தவரை அனுபவம் மற்றும் பேட்டிங் ஆழம் தான் எப்போதுமே பலமான ஒன்றாக இருக்கும். அந்தவகையில் இந்தமுறையும் பிராவோ, ஜடேஜா, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, மிட்செல் சாண்ட்னர் என பழைய வீரர்களையே எடுத்துள்ளது. ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்க மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு,உத்தப்பா, மொயின் அலி ஆகியோர் உள்ளனர். லோயர் ஆர்டரில் தோனி, பிராவோ, ஜடேஜா, ஷிவம் தூபே என ஆழமான பேட்டிங் வரிசை உள்ளது.

சிஎஸ்கே பலவீனம்

சிஎஸ்கே பலவீனம்

இந்தாண்டு சென்னை அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது டெத் ஓவர் பவுலிங் தான். தீபக் சஹார் முதல் பாதி தொடரில் இருக்க மாட்டார் எனத்தெரிகிறது. ஹாசல்வுட்டும் அணியில் இல்லை. இதனால் கிறிஸ் ஜோர்டன், பிராவோவை வைத்து தான் தோனி சமாளிக்க வேண்டும். இவர்களை தவிர்த்து பார்த்தால், துஷார் தேஷ்பாண்டே உள்ளார். ஆனால் அவரும் கடந்தாண்டு சரிவர பவுலிங் வீசவில்லை. இதை தோனி எப்படி சரி செய்யப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரச்சினைகள்

பிரச்சினைகள்

சிஎஸ்கேவில் தற்போது எந்த 4 அயல்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருவது என்ற குழப்பம் உள்ளது. பிராவோ மற்றும் மொயீன் அலியின் இடங்கள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் டெவோன் கான்வே விளையாடுவார். கடைசி இடத்திற்கு கிறிஸ் ஜோர்டனை கொண்டு வருவார்களா, அல்லது டுவைன் பிரிட்டோரிய்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரை பயன்படுத்துவார்களா எனக்குழப்பம் உள்ளது.

ஜாக்பாட் அடித்த வீரர்கள்

ஜாக்பாட் அடித்த வீரர்கள்

ஐபிஎல் தொடரை வைத்து தான் பிசிசிஐ டி20 உலகக்கோப்பை அணியை உருவாக்கவுள்ளது. அதன்படி ஐபிஎல் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்காவுடன் 5 டி20 போட்டிகள் உள்ளன. இதனால் சிஎஸ்கேவில் உள்ள ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ருதுராஜ் கெயிக்வாட், ஷிவம் தூபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியிலேயே வாய்ப்பு கிடைக்கும்.

Recommended Video

IPL 2022: CSK Owner N srinivasan conversation with MS Dhoni and team mates | Oneindia Tamil
ப்ளேயிங் 11 கணிப்பு:

ப்ளேயிங் 11 கணிப்பு:

டெவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஷிவம் தூபே, தோனி, ஜடேஜா, டுவைன் பிராவோ, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆடம் மில்னே, தீபக் சஹார்

Story first published: Friday, March 18, 2022, 16:49 [IST]
Other articles published on Mar 18, 2022
English summary
CSK team Strength and weakness, Best playing 11, here are the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+