For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் சுத்த வெஸ்ட்.. கும்ப்ளேவை வம்பிழுத்த கவாஸ்வர்.. வாய்ப்பே இல்லை என விமர்சனம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப் அணி தான் சுத்த வெஸ்ட் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் தொடங்கப்பட்ட போது இருந்த 8 அணிகளில், இதுவரை மூன்றே அணிகள் தான் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.

அதில் ஒரு அணி தான் பஞ்சாப். இந்த நிலையில் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் வேறு அணிக்கு சென்ற நிலையில் இம்முறை மாய்ங அகர்வால் கேப்டன் பொறுப்பை வகித்து வருகிறார்.

பஞ்சாப் வீரர்கள்

பஞ்சாப் வீரர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான், பாரிஸ்டோ, ரபாடா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷாரூக்கான், ராகுல் சஹார் போன்ற நட்சத்தி வீரர்கள் உள்ளனர்.இதே போன்று அண்டர் 19 தொடரில் கலக்கிய ராஜ் பவாவும்,சீனியர் ஆல்ரவுண்டர் ரிஷி தவான், இளம் வீரர் வைபவ்அரோரா,இஷான் போரேல் போக்னற வீரர்களும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

ஆனால் பஞ்சாப் அணியை மட்டம் தட்டும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். பஞ்சாப் அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வாங்கியது இல்லை. இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. பஞ்சாப் அணியில் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வீரர்கள் யாரும் இல்லை.

ஒரு சில வெற்றி

ஒரு சில வெற்றி

இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு ஒரு நல்ல விஷயம் மட்டும் உள்ளது. அந்த அணி மீது எந்த பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை. இதனால், பஞ்சாப் அணி நெருக்கடி இல்லாமல் விளையாட முடியும். எந்த அழுத்தமும் இல்லாததால் வீரர்கள் சுதந்திரமாக ரன்கள் சேர்க்கலாம். இதனால் பஞ்சாப் அணி ஒரு சில போட்டிகளில் வெற்றி பெறலாம்.

Recommended Video

IPL 2022 Auction: Punjab Kings SWOT Analysis | Aanee Cricket | OneIndia Tamil
கும்ப்ளே அதிருப்தி

கும்ப்ளே அதிருப்தி

ஆனால் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது மிகவும் கடினம். முதலில் அணியாக பஞ்சாப் அணி வெல்லும் பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும் என்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். கவாஸ்கரின் இந்த பேச்சு, அனில் கும்ப்ளேவை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது, பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வரும் 27ஆம் தேதி பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Story first published: Thursday, March 24, 2022, 13:16 [IST]
Other articles published on Mar 24, 2022
English summary
IPL 2022- Sunil Gavaskar criticize Punjab kings team for not having impactful players ஐபிஎல் தொடரில் பஞ்சாப் சுத்த வெஸ்ட்.. கும்ப்ளேவை வம்பிழுத்த கவாஸ்வர்.. வாய்ப்பே இல்லை என விமர்சனம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+