Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பணத்தை பார்த்தவுடன் கனவை மறப்பதா?” ஐபிஎல்-ல் சொதப்பிய இளம் வீரர்கள்.. சுனில் கவாஸ்கர் விளாசல்!

மும்பை: நிறைய வீரர்கள் பணத்தை பார்த்தவுடன் தங்களது கனவுகளை தொலைத்துவிடுவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Recommended Video

IPL 2022-ல் சொதப்பிய இளம் வீரர்கள்.. விளாசிய Sunil Gavaskar #Cricket

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தனது அறிமுக போட்டியிலேயே கோப்பையை வென்றது.

இந்த முறை ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் உட்பட பல சீனியர் வீரர்கள் கம்பேக் கொடுத்தனர்.

சொதப்பிய வீரர்கள்

சொதப்பிய வீரர்கள்

இதே போல பல இளம் வீரர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால் கடந்தாண்டு சிறப்பாக செயல்பட்டிருந்த வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு சென்றுவிட்டனர். கடந்தாண்டை போல சிறந்த இன்னிங்ஸ்களை அவர்கள் பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

கவாஸ்கர் பேச்சு

கவாஸ்கர் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களை கண்டறிகிறது. இது வழக்கமான ஒன்று தான். அதே சமயம் முந்தைய சீசனில் கலக்கிய வீரர்கள் நடப்பு தொடரில் படு மோசமாக சொதப்பியிருந்தனர். ஒரு சீசனில் சதம் அடிப்பது விக்கெட் எடுப்பதை பார்த்து எதுவும் முடிவு செய்யக்கூடாது என்பது சரியாக தான் உள்ளது.

லட்சியங்கள் குறைகிறது

லட்சியங்கள் குறைகிறது

2வது சீசனிலும் அந்த வீரர் அட்டகாசமாக இருந்தால் நிச்சயம் அற்புதமான கிரிக்கெட் வாழ்வை பெறுவார்கள். பல ஐபிஎல் நட்சத்திரங்கள் உள்ளூர் போட்டிகளில் பெரிதும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரிலேயே அதிகப்படியான பணம் வருவதால் அவர்களின் ஆசைகள் மற்றும் லட்சியங்களும் குறைந்துவிடுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட்டிற்கு சற்று பின்னடைவு ஏற்படுகிறது.

கோடிகளில் ஊதியம்

கோடிகளில் ஊதியம்

கடந்த சீசனில் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டு விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடப்பாண்டு மெகா ஏலத்தின் போது பல கோடிகளுக்கு தக்கவைக்கப்பட்டனர். ஆனால் மூன்று வீரர்களுமே மோசமாக சொதப்பினர். இதனால் ஒரு சீசனில் கலக்கிய வீரர்கள் மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

Story first published: Tuesday, May 31, 2022, 17:40 [IST]
Other articles published on May 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+