Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவர்பிளேவில் எஸ்ஆர்ஹச் மோசமான சாதனை..14 பந்துகளில் 40 ரன்கள் அடித்த தமிழக வீரர்.. ராஜஸ்தான் அபாரம்

புனே: ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

2 அணியிலும் பல புது வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் 7 பேர் அறிமுக வீரராக களமிறங்கினர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக ஜெய்ஷ்வால், பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

நோ பால்

நோ பால்

முதல் ஓவரின் 5வது பந்தில் ஜாஸ் பட்லர் விக்கெட்டை புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் , பட்லருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதே போன்று ஐதராபாத் அணி 4 ஓவரில் 4 நோ பால்கள் ஐதாராபாத் அணி வீசியது. எனினும் சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 3 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 28 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். ஜெய்ஷ்வாலும் இளங்கன்று பயம்அறியாது என்ற வகையில் பெரிய ஷாட்களை ஆடி 20 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

5 சிக்சர்

5 சிக்சர்

இதன் பின்னர் 100வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரசிகர்களுக்கு பார்டி வைத்தார். முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். 25 பந்தில் அரைசதம் விளாச சஞ்சு சாம்சன், 5 இமாலய சிக்சர்களை விரட்டினார். சஞ்சுக்கு போட்டியாக படிக்கல்லும் அதிரடியாக விளையாடினார். இறுதியில் சிம்ரன் ஹேட்மர் 13 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.இதனால் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 210 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்தது.

சர்ச்சை

சர்ச்சை

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை வில்லியம்சன் அடிக்க முயல, அதனை சஞ்சு சாம்சன் பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் கையிலிருந்து பந்து வெளியே வர, அருகில் இருந்த படிக்கல் அதனை பிடித்தார். இதற்கு மூன்றாம் நடுவர் அவுட் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி

தோல்வி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி மற்றும் அதிரடி வீரர் பூரான் டக் அவுட்டாக, அபிஷேக் சர்மா சொற்ப ரன்களில் வெளியேற, பவர்பிளேவில் ஐதராபாத் அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் குறைந்தபட்ச ஸ்கோராகும். இறுதியில் ஏய்டன் மார்க்கரம் 41 பந்துகளில் 57 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதனால் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டி20 கிரிக்கெட்டில் சாஹல் வீசிய 250வது விக்கெட் ஆகும்.

Story first published: Wednesday, March 30, 2022, 1:03 [IST]
Other articles published on Mar 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+