மும்பைக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி பேட்டிங் சிக்கல் தீர்ந்தது..ஸ்ரேயாஸ் வைத்த இன்ப அதிர்ச்சி
புனே: ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் இன்று பலம் வாய்ந்த மும்பை அணியும், கேகேஆர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு புனேவில் தொடங்குகிறது.
மும்பை அணி விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவிய நிலையில், வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை விளையாடிய 3 போட்டியில் 2 ஆட்டத்தில் வென்று நல்ல உத்வேகத்துடன் உள்ளது.

நட்சத்திர வீரர்
மும்பை அணிக்கு பேட்டிங் சிக்கலாகவே உள்ளது. மெகா ஏலத்தால் மும்பை அணியின் தோற்றமே மாறிவிட்டது. இது நடப்பு சீசனில் அந்த அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மும்பை அணியில் காயம் காரணமாக கடந்த 2 போட்டியில் விளையாடாத சூர்யகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் மாற்றம்
சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டார். இதனால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று மும்பை அணியில் இடம்பெற்றுள்ள பாசில் தம்பியின் பந்துவீச்சும் எடுப்படவில்லை. இதனால் அந்த இடத்துக்கு உனாட்கட் களமிறங்க வாய்ப்புள்ளது. மும்பை அணி பேட்டிங் மற்றும் பவுலிங் கிளிக் ஆனால் மட்டுமே கொல்கத்தாவுக்கு நெருக்கடி தர முடியும்.

பலவீனம்
இதே போன்று கொல்கத்தா அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார். மும்பை அணியின் இஷான் கிஷன் பாட் கம்மின்ஸிடம் இதுவரை 5 பந்துகளை எதிர்கொண்டு 3 முறை அவுட் ஆகியுள்ளார். இதே போன்று ரோகித் சர்மா நரைன் பந்துவீச்சில் 18 இன்னிங்சில் 7 முறை அவுட் ஆகியுள்ளார்.

நேருக்கு நேர்
இதனால் இவ்விருவரை வைத்து ஸ்ரேயாஸ் ஐயர் மும்பைக்கு எதிராக காய் நகர்த்த உள்ளார். மும்பை, கொல்கத்தா அணிகள் மோதிய போட்டிகளில் மும்பை 22 முறையும், கொல்கத்தா அணி 7 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை ஹாட்ரிக் தோல்வி பெறுமா இல்லை கொல்கத்தா 3வது வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications