Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் யாதவ் விலகல்.. களமிறங்கிய 5 அதிரடி வீரர்கள்.. கலைக்கட்டு மும்பை vs கொல்கத்தா போட்டி!

மும்பை: 5 முக்கிய மாற்றங்களுடன் மும்பை அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியை கொல்கத்தா எதிர்கொண்டுள்ளது.

Recommended Video

IPL 2022 Mumbai Indians நட்சத்திர வீரர் Suryakumar Yadav விலகல் | Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. எனினும் மற்ற சில அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்புகளை கெடுக்க முடியும். அந்தவகையில் இன்று கொல்கத்தா அணிக்கு மிக முக்கிய போட்டியாகும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

ப்ளே ஆஃப் செல்ல 16 புள்ளிகள் தேவை. கொல்கத்தா அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட 14 புள்ளிகளை தான் பெறும். எனினும் மற்ற அணிகளின் தோல்விகளால் ரன் ரேட் அடிப்படையில் செல்ல வாய்ப்பு ஏற்படலாம். அதனை உறுதி செய்யும் போட்டியில் தான் இன்று ஆடுகிறது. இதற்காக 5 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.

யார் அந்த 5 வீரர்கள்

யார் அந்த 5 வீரர்கள்

அந்த அணியில் நட்சத்திர வீரர்களான அஜிங்கியா ரகானே, பேட் கம்மின்ஸ், வெங்கடேஷ் ஐயர், ஷெல்டன் ஜாக்சன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஓப்பனிங் முதல் பவுலிங் வரை இது அந்த அணியின் பலத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் விலகல்

சூர்யகுமார் யாதவ் விலகல்

இதே போல மும்பை அணியில் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வெளியேற்றப்பட்டுள்ளார். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்தே வெளியேறியுள்ளார். அவருக்கு மாற்றாக ராமந்தீப் சிங் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்பட்டுள்ளார்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

கொல்கத்தா அணி: அஜிங்கியா ரகானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், ஷெல்டன் ஜாக்சன், பேட் கம்மிங்ஸ், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி

மும்பை அணி : இஷான் கிஷான், ரோகித் சர்மா, திலக் வர்மா, டிம் டேவிட், கெயீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ராமன்தீப் சிங், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்

Story first published: Monday, May 9, 2022, 19:34 [IST]
Other articles published on May 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+