Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒன் மேன் ஆர்மி” ஒரே ஆளாக மும்பையின் மானம் காத்த சூர்யகுமார் யாதவ்.. ஐபிஎல்-ல் பெருமை மிகு தருணம்!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் மானத்தை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் பெரும் குழப்பம் நிகழந்தது.

சிறந்த தொடக்கம்

சிறந்த தொடக்கம்

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அதன் பின்னர் பெரும் சரிவு ஏற்பட்டது. அவர்கள் இருவருமே 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த டேவாட் பிரேவிஸ் 8 ரன்களுக்கு வெளியேறினார்.

சரிவில் சென்ற மும்பை

சரிவில் சென்ற மும்பை

நம்பிக்கை நட்சத்திரங்களாக பார்க்கப்பட்ட திலக் வர்மா, கெயீரன் பொல்லார்ட் ஆகியோரும் டக் அவுட்டாகினர். ராம்தீப் சிங் 6 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 50 - 1 என இருந்த மும்பை அணியின் ஸ்கோர் 79 - 6 என மோசமான நிலைக்கு சென்றது. 100 ரன்களை கூட மும்பை அணி எடுக்காது என ரசிகர்கள் முடிவே செய்துவிட்டனர்.

 தனி ஒருவன்

தனி ஒருவன்

ஆனால் அப்போது தான் 'ஒன் மேன் ஆர்மியாக' களத்தில் நின்றார் சூர்யகுமார் யாதவ். நான் ஸ்ட்ரைக்கருக்கு உனத்கட்டை வைத்துக்கொண்டு முழு ஸ்ட்ரைக்கையும் தன் பக்கமே எடுத்துக்கொண்டார். கடும் அழுத்தங்களுக்கு இடையே 37 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினார். இதனால் 79 - 6 என்ற நிலையில் இருந்து 151 - 6 என அபார ஸ்கோரை மும்பை அணி எட்டியது.

வல்லுநர்களின் நம்பிக்கை

வல்லுநர்களின் நம்பிக்கை

கையில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யகுமார் யாதவ் நீண்ட ஓய்வில் இருந்தார். மும்பை அணியின் முதல் 2 போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால் அட்டகாச கமேக்காக கொல்கத்தாவுக்கு எதிராக 52 (36), பெங்களூருக்கு எதிராக 68 (37) எனக்குவித்து அசத்தியுள்ளார். சூர்யகுமாருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தால் டி20 உலகக்கோப்பையில் பெரிய பங்காற்றுவார் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, April 9, 2022, 23:02 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+